Asianet News TamilAsianet News Tamil

திமுக அரசு யாருக்காக நடத்தப்படுகிறது? அண்ணாமலை கேள்வி!

பார்வை மாற்றுத் திறனாளிகள் கைது செய்யப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்

BJP state president annamalai condemns dmk govt on Visually impaired people arrested smp
Author
First Published Feb 22, 2024, 4:40 PM IST | Last Updated Feb 22, 2024, 4:40 PM IST

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான நான்கு சதவீத இட ஒதுக்கீட்டில் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வை மாற்றுத் திறனாளிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டெர்லிங் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பார்வை மாற்றுத் திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், பார்வை மாற்றுத் திறனாளிகள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அரசு யாருக்காக நடத்தப்படுகிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இடஒதுக்கீடு முறையின்படி, தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பார்வைத்திறன் மாற்றுத் திறனாளர்களுக்கு 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாற்றுத் திறனாளர்கள், பல ஆண்டுகளாக கோரிக்கைகள் வைத்து வருகிறார்கள்.

செல்வப்பெருந்தகையிடம் சாவி கொத்தையே ஒப்படைத்துள்ளேன் - கே.எஸ்.அழகிரி!

முறையான கல்வித் தகுதியும், தகுதித் தேர்வில் வெற்றியும் பெற்று, பல ஆண்டுகளாகக் காத்திருந்தும், தங்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்காமல் வஞ்சித்து வரும் தமிழக அரசை வலியுறுத்தி, கடந்த ஆறு நாட்களாக சென்னையில் போராட்டம் நடத்திய பார்வைத் திறன் மாற்றுத் திறனாளர்கள் நேற்றைய தினம் திமுக அரசால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

போலி சமூக நீதி பேசி, ஆண்டாண்டு காலமாக மக்களை ஏமாற்றி வரும் திமுக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இடஒதுக்கீடு நடைமுறையை அமல்படுத்துவதில் எதற்காகத் தயங்குகிறது என்ற கேள்வி எழுகிறது. அதுமட்டுமின்றி, கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாற்றுத் திறனாளர்களுக்கான ரூ.1000 உதவித் தொகையை உயர்த்துவதாக அறிவித்தது முதல், பல மாவட்டங்களில் உதவித் தொகை வழங்கப்படவே இல்லை என்ற அதிர்ச்சித் தகவலும் வெளிவந்திருக்கிறது. உண்மையில் இந்த திமுக அரசு யாருக்காக நடத்தப்படுகிறது? 

 

 

உடனடியாக, பார்வைத் திறன் மாற்றுத் திறனாளர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்று, அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன். பணம் வசூலிக்கலாம் என்பதற்காக மாற்றுத் திறனாளர்கள் பணி நியமனங்களைக் காலதாமதப்படுத்தும் எண்ணம் இருந்தால், துறையற்ற அமைச்சர்களின் இன்றைய நிலையை பணிவன்புடன் நினைவுபடுத்த விரும்புகிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios