தேசத்தை காக்க வந்தவர் போல் ரூபாய் நோட்டு விவகாரத்தில் பொங்கோ பொங்குன்னு கூவி ,பொங்கிய பாஜக பிரமுகர் 20.55 லட்சம் பணத்துடன் சிக்கி வருமான வரியினர் ரெய்டிலும் சிக்கினார். இதனால் வாட்ஸ் அப் வலைதளங்களில் அவர் பெயர் ரிப்பேரானதை அடுத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக தமிழிசை அறிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பிரதமர் மோடி 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தவுடன் நாடெங்கும் பொதுமக்கள் கடுமையான துன்பத்துக்கு ஆளானார்கள். திடீரென அறிவிக்கப்பட்டதால் தங்கள் சேமிப்பை என்ன செய்வது என்று தெரியாமல் வங்கி வாசலில் வரிசையில் நின்று பணத்தை டெபாசிட் செய்தார்கள்.

வியாபாரிகள் , விவசாயிகள் , தொழி முனைவோர் , இல்லத்தரசிகள் , குடும்பஸ்தர்கள் , மாணவர்கள் , தொழிலாளிகள் என ரூ.2000 பணத்துக்காக வங்கி வாசலிலும் ஏடிஎம் வாசலிலும் நிற்கும் நிலை ஏற்பட்டது. 

வங்கி வரிசையில் நின்றே 78 பேர் உயிரிழந்தனர். 41 வங்கி ஊழியர்கள் மன உலைச்சலால் உயிரிழந்தனர். ஆனால் இதையெல்லாம் எல்லையில் காவல் காக்கும் ராணுவ வீரர்களுடன் ஒப்பிட்டு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினர் பாஜக ஆட்கள்.

பொதுமக்கள் கொந்தளித்து வேதனையுடன் வேலைக்கும் செல்ல முடியாமல் வங்கியிலும் நிற்க முடியாமல் அவஸ்தை பட்ட நேரத்தில் பிரதமர் மோடி முதல் பாஜக அனைத்து ஆதரவு ஆட்களும் வாட்ஸ் அப்களிலும் , ஃபேஸ்புக்கிலும், டுவிட்டரிலும் பிரதமர் நரேந்திர மோடியை தேவ தூதன் போன்றும் இந்த் துன்பங்கள் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை எனபது போல் பேசினர்.

எல்லையில் ராணுவம் படும் துன்பத்தை பார் அதை விடவா உன் துன்பம் , 50 நாள் தான் அதன் பிறகு இந்தியா என்ன ஆகப்போகிறது பார் என்று ஒரு பக்கம். 


ஆனால் இப்படி பொங்கி கொண்டே தங்கள் கருப்பு பணத்தை மாற்றி வெள்ளையாக்கியவர்கள் பல பேர் என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் வாகன சோதனையில் இது போல் ஃபேஸ்புக்கில் பொங்கிய பாஜக சேலத்தை சேர்ந்த பாஜக இளைஞர் அணி கோட்ட பொறுப்பாளராக இருக்கும் பிரமுகர் ஜே.வி.ராம் என்பவர் ரூ.20.55 லட்சம் கருப்பு பணத்துடன் சிக்கினார்.

பணத்துக்கு கணக்கு வரவு செலவு விபரம் எதுவும் இல்லை. இதையடுத்து நேற்று திடீரென அவர் வீட்டுக்கு ரெய்டு போன வருமான வரித்துறையினர் ஏராளமான ஆவணங்களை அள்ளி சென்றனர்.

இதுதான் பாஜகவினர் மற்றும் இதை ஆதரிக்கும் பணமுதலைகளின் லட்சணம் என்று பொதுமக்கள் வாட்ஸ் அப்புகளிலும் , ஃபேஸ்புக்கிலும் போட்டு பாஜக பிரமுகரை துவைத்து காய வைக்கின்றனர். அதற்கு சான்றாக அவர் பேஸ்புக்கில் கருப்புபணத்துக்கு எதிரா பொங்கிய ஸ்டேட்டஸ்களை போட்டு வருகின்றனர். இதையடுத்து அந்த பிரமுகரின் மானம் மட்டுமல்ல பாஜகவின் மானமும் கப்பலேறுவதை கண்ட பாஜக தலைமை அவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. 

இதற்கான அறிவிப்பை தமிழிசை வெளியிட்டுள்ளார்.