Asianet News TamilAsianet News Tamil

கேட்டது 38,000 கோடி! கொடுத்தது 275 கோடி! பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல! வன்மம்! சு.வெங்கடேசன்!

தமிழகத்தில் கடந்த டிசம்பர் 3, 4-ம் தேதிகளில் மிக்ஜாம் புயல், கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 வட மாவட்டங்களும், டிசம்பர் 17, 18-ம் தேதிகளில் பெய்த அதிகனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 தென் மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. 

BJP is not angry with Tamil Nadu..Animosity.. su venkatesan tvk
Author
First Published Apr 27, 2024, 10:57 AM IST

கர்நாடகா மாநிலத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக 3454 கோடி மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. ஆனால், தமிழகத்திற்கு மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு 275 கோடி மட்டுமே வழங்கியதற்கு சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 3, 4-ம் தேதிகளில் மிக்ஜாம் புயல், கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 வட மாவட்டங்களும், டிசம்பர் 17, 18-ம் தேதிகளில் பெய்த அதிகனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 தென் மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதனையடுத்து மழை, வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினரும் ஆய்வு செய்தனர்.

BJP is not angry with Tamil Nadu..Animosity.. su venkatesan tvk

இந்த இரு இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுகட்டமைப்பு, நிவாரண பணிக்காக 4 வட மாவட்டங்களுக்கு ரூ.19,692.69 கோடி, 4 தென் மாவட்டங்களுக்கு ரூ.18,214.52 கோடி என மொத்தம் ரூ.37,907.21 கோடி நிவாரண தொகை வழங்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியது. ஆனால், வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு நிதி வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இதனால், வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு, ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை என திமுக குற்றம்சாட்டி வந்தது. 

BJP is not angry with Tamil Nadu..Animosity.. su venkatesan tvk

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த தமிழகத்திற்கு மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள நிவாரணமாக ரூ.275 கோடியும், கர்நாடகாவில் முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வறட்சி  நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசுஒதுக்கீடு செய்துள்ளது.  மத்திய அரசு தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மத்தியில், தேர்தல் ஆணையத்தின் சிறப்பு அனுமதி பெற்று, கர்நாடகா மற்றும் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கி உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை மத்திய அரசு செய்வதாக  சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில்: கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல... வறட்சி நிவாரணம் என 3454 கோடி அறிவிப்பு. 

 

தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு 275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம் என குறிப்பிட்டுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios