அக்.3இல் அண்ணாமலை தலைமையில் பாஜக ஆலோசனை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது

BJP executives meeting to be held on  october 2nd led by annamalai smp

அதிமுக - பாஜக இடையேயான கூட்டணியில் அண்மைக்காலமாக விரிசல் ஏற்பட்ட நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் கடந்த 25ஆம் தேதி நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில், பாஜகவுடனான கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அண்மைக்காலமாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக தலைவர்களுக்கும் இடையே வார்த்தை போர் முற்றி வந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், பாஜக தலைமையகமான சென்னை கமலாலயத்தில் அக்டோபர் 3ஆம் தேதி அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி முறிந்த நிலையில் பாஜகவின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல், கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது உள்ளிட்ட விஷயங்கள் இக்கூட்டத்தின்போது விவாதிக்கப்படும் என தெரிகிறது.

அண்ணாமலையாலேயே கூட்டணி முறிந்ததாக அதிமுக தெரிவித்துள்ள நிலையில், பாஜக தேசியத் தலைமை இன்னும் இதுகுறித்து எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதேசமயமம், அண்ணாமலைக்கு எதிரான நடவடிக்கையையும் பாஜக மேலிடம் எடுக்கவில்லை. எனவே, இந்த கூட்டணி மீண்டும் இணைய  வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், “உண்மைக்கு மாறான விமர்சனங்களை அண்ணாமலை வைத்ததாலேயே கூட்டணி முறிந்துள்ளது. பாஜகவுடன் மீண்டும் கூட்டணி இல்லை. நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி அல்ல; பாஜக கூட்டணியில் நேரம் வரும்போது அதிமுக சேர்ந்துவிடும் என்பது கவனத்தை திசைதிருப்பும் செயல்.” என அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

முன்னதாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து பிரிந்து செல்வதாக அதிமுக அறிவித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று கூறிய தமிழக பாஜக தேசிய இணைப் பொறுப்பாளர் பொங்குலெடி சுதாகர் ரெட்டி, இதுகுறித்து விரைவில் கட்சியின் மாநிலக் குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றார்.

செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை பதினைந்து நாட்கள் பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதற்கு பிறகு, பல முக்கிய ஆலோசனைக் கூட்டங்கள் பாஜகவின்  அனைத்து மட்டத்திலும் நடைபெறவுள்ளன. அதனடிப்படையில், அண்ணாமலை தலைமையில் பாஜகவின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் அக்டோபர் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios