திமுகவில் இணைகிறாரா பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்..? அவரே சொன்ன பரபரப்பு தகவல்
திமுகவில் இணைய போவதாக தகவல் பரப்பினார்கள். எந்த எண்ணத்தில் அனைவரும் இதை எதிர்பார்க்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. என்னைய பொறுத்தவரை கட்சி பாகுபாடு இன்றி அனைவரிடம் பழகுவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திமுக- பாஜக மோதல்
தமிழகத்தில் திமுக- பாஜக இடையே தொடர் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் மதுரை மாவட்ட தலைவராக இருந்த டாக்டர் சரவணன் திடீரென பாஜகவில் இருந்து விலகினார். விரைவில் திமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து பாஜகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் திமுகவில் இணையவுள்ளதாக கடந்த சில மாதங்களாக தகவல் பரவியது. இதனையடுத்து யார் இணையபோகிறார்கள் என்ற கேள்வி திமுக- பாஜகவினர் இடையே எழுந்தது. இந்தநிலையில்பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரனிடம் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலக செஸ் போட்டியில் முதலமைச்சர் ஸ்டாலினும், பிரதமர் மோடியும் கலந்து கொண்டார்கள் நட்புவோடு கலந்து கொண்டார்கள் பேசிக் கொண்டார்கள் அதை வைத்து திமுகவும் பாஜகவும் நெருங்குகிறது என்று கூற முடியாது. அதேபோல கவர்னர் நிகழ்ச்சியில் திமுக கலந்து கொள்ளவில்லை என்பதற்காக திமுக பாஜகவை விட்டு விலகி இருக்கிறது என்றும் கூற முடியாது, பாஜக மத்திய அரசாங்கம் திமுக மாநில அரசாங்கம் என தெரிவித்தார்.
திமுகவில் நயினார் நாகேந்திரன்
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்பார் என தெரிவித்தார். திமுகவுடன் நட்பு தொடருமா என்ற கேள்விக்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், எங்களைப் பொறுத்தவரை ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளோம். நட்பா நட்பு இல்லையா என்பதை திமுக தான் முடிவு செய்ய வேண்டும் என கூறினார். இப்பொழுதும் அதிமுகவுடன் பாஜக கூட்டணியாக உள்ளது. ஓபிஎஸ் இருந்தாலும் இபிஎஸ் இருந்தாலும் அதிமுகவும் பாஜக கூட்டணி தொடரும் என்பதில் உறுதியாக உள்ளோம் என தெரிவித்தார். மேலும் திமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், நைனார் நாகேந்திரன் திமுகவில் இணைய உள்ளதாக தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்த தகவல் இப்போது மட்டும் வெளியாகவில்லை அதிமுகவில் நான்இருந்த போதே கூறினார்கள். அப்போது ஜெயலலிதாவும் இருந்தார். இப்பொழுதும் நயினார் நாகேந்திரன் திமுகவில் இணைய போவதாக தகவல் பரப்பினார்கள். எந்த எண்ணத்தில் அனைவரும் இதை எதிர்பார்க்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. என்னைய பொறுத்தவரை கட்சி பாகுபாடு இன்றி அனைவரிடம் பழகுவதாக தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
இபிஎஸ் பொதுச்செயலாளர் ஆனது செல்லாது...! அதிர்ச்சி அளித்த உயர்நீதிமன்றம்...உற்சாகத்தில் ஓபிஎஸ்