பத்து திருக்குறள் சொன்னா பிரியாணி இலவசம்! செம்ம ட்ரீட் கொடுக்கும் ஹோட்டல்!
10 வயதுக்கு உட்பட்டவர்கள் 10 குறள்களைச் சொன்னால் ஒரு பிரியாணி இலவசமாகக் கொடுப்பார்களாம். 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் 20 குறள்களைச் சொன்னால் ஒரு பிரியாணியை ஃப்ரீயாகப் பெற்று சாப்பிட்டு மகிழலாம்.
திருவள்ளூரில் உள்ள ஹோட்டலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருக்குறள்களை ஒப்பிக்கும் நபர்களுக்கு சிக்கன் பிரியாணி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனிஃபா பிரியாணி உணவகம் திருக்குறள் சொல்பவர்களுக்கு இலவசமாக பிரியாணி அளிப்பதாக அறிவித்திருக்கிறது. ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டும் இது பொருந்தும்.
உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளின் சிறப்பை மக்களுக்குக் கூறும் வகையில் இந்த முயற்சியை அந்த ஹோட்டல் உரிமையாளர் செய்துவருகிறார். ஒவ்வொரு ஆண்டும் இந்த ஹோட்டலில் இப்படி வித்தியாசமான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியை நடத்தி வருகிறது.
இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.3 சதவீதமாகத் தொடரும்: உலக வங்கி கணிப்பு
10 வயதுக்கு உட்பட்டவர்கள் 10 குறள்களைச் சொன்னால் ஒரு பிரியாணி இலவசமாகக் கொடுப்பார்களாம். 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் 20 குறள்களைச் சொன்னால் ஒரு பிரியாணியை ஃப்ரீயாகப் பெற்று சாப்பிட்டு மகிழலாம். இதில் முக்கியமாக இரண்டு நிபந்தனைகளும் விதிக்கப்படுகின்றன.
ஒருவருக்கு ஒரு வாய்ப்பு மட்டுமே கொடுக்கப்படுமாம். எந்தெந்த திருக்குறள்களைச் சொல்லப்போகிறீர்களோ அதையெல்லாம் எழுதிக் கொண்டுவர வேண்டுமாம். 16 ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் போட்டியைத் தொடங்கி நடத்திவருகிறாராம்.
பாலிவுட் விழாக்களில் செருப்பு போட்டுச் சென்றால் தப்பா... உருவக் கேலி குறித்து விஜய் சேதுபதி வேதனை