Asianet News TamilAsianet News Tamil

அரசு பேருந்து டிரைவர்-கண்டக்டர்களுக்கு இனி பயோமெட்ரிக் வருகை பதிவு... போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு!!

தமிழக அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவர்-கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு செயல்படுத்தப்படுவதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. 

biometric attendance for tn govt bus driver and conductors says tn transport dept
Author
Tamil Nadu, First Published Jun 10, 2022, 4:36 PM IST

தமிழக அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவர்-கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு செயல்படுத்தப்படுவதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மேலும் தொழில்நுட்ப பணியாளர்கள் காலை 8 மணிக்கும், நிர்வாகப் பணியாளர்கள் காலை 10 மணிக்கும் பணிக்கு வரும் போது வருகை பதிவு செய்ய வேண்டும் என்றும் மாலை பணிமுடிந்து செல்லும் போதும் பயோமெட்ரிக் கருவி மூலம் பதிவு செய்துவிட்டு செல்ல வேண்டும் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து சென்னை, தமிழக அரசு போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணிபுரியும் தொழில்நுட்ப பணியாளர்கள், நிர்வாகப் பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களின் வருகை பதிவு பயோமெட்ரிக் கருவி மூலம் பயன்பாட்டிற்கு செயல்படுத்தப்படுகிறது.

biometric attendance for tn govt bus driver and conductors says tn transport dept

தொழில்நுட்ப பணியாளர்கள் காலை 8 மணிக்கும், நிர்வாகப் பணியாளர்கள் காலை 10 மணிக்கும் பணிக்கு வரும் போது வருகை பதிவு செய்ய வேண்டும். மாலை பணிமுடிந்து செல்லும் போதும் பயோமெட்ரிக் கருவி மூலம் பதிவு செய்துவிட்டு செல்லவேண்டும். ஓட்டுனர், நடத்துநர், பேருந்து தடத்தில் செல்வதற்கு பணிமனை வாயிலிருந்து புறப்படும் பொழுது சோதனை முறையில் பயோமெட்ரிக் சிஸ்டம் மூலம் வருகை பதிவு செய்ய வேண்டும். பேஸ்புக் அடிப்படையில் பயோமெட்ரிக் சிஸ்டம் வருகைப் பதிவு முறை மேம்படுத்தப்படும். போக்குவரத்துத் துறையில் புதிதாக பணியாளர்கள் பணிமனையில் சேர்ந்தாலும் அவர்களுடைய பெயரையும் உடனடியாக பயோமெட்ரிக் முறை வருகை பதிவில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios