அதிகரிக்கும் பைக் ரேஸ்.. பெத்தவங்க தான் பொறுப்பு.. கடும் நடவடிக்கை எடுப்போம்.. எச்சரிக்கை விடுத்த காவல்துறை..
சிறார்கள் பைக் ரேஸில் ஈடுபட்டால் பெற்றோர்கள், பாதுகாவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. பைக் ரேஸில் ஈடுபடுவோரிடம் நன்னடத்தை உறுதி மொழி பத்திரம் வாங்கப்படும் என்றும் நன்னடத்தை உறுதிமொழி பத்திரத்தை மீறி இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்திருக்கிறது.
சிறார்கள் பைக் ரேஸில் ஈடுபட்டால் பெற்றோர்கள், பாதுகாவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. பைக் ரேஸில் ஈடுபடுவோரிடம் நன்னடத்தை உறுதி மொழி பத்திரம் வாங்கப்படும் என்றும் நன்னடத்தை உறுதிமொழி பத்திரத்தை மீறி இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்திருக்கிறது.
பைக் ரேஸில் ஈடுபடுவது குறித்து அடிக்கடி எச்சரிக்கை விடுத்தும், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் பெற்றோர்களையும் வரவழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பல்வேறு நடவடிக்கைகளை சென்னை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் கடந்த 10 நாட்களில் பைக் ரேஸில் ஈடுபட்டதாக 2 சிறுவர்கள் உட்பட 37 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, 400 அடி வெளிவட்ட சாலைகளில் பைக் ரேஸில் ஈடுப்படுவதை தடுக்கும் வகையில் காவல்துறையினர் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர்.
சென்னையில் மெரீனா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் பைக் ரேஸால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்துள்ளதால் இரவு நேரங்களில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். பைக் ரேஸ் சாகசம் புரிவதை முழுவதுமாக தடுக்கும் வகையில் சிறப்பு நடவடிக்கைகள் தொடரும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்களையும்,ஆபத்தான முறையில் பைக் ரேஸ்ஸில் ஈடுபடுவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அண்மையில் உத்தரவிட்டுள்ளார்.
18 வயது நிரம்பாத தங்களது பிள்ளைகள் இருசக்கர வாகனங்களை இயக்காமல் இருக்க தொடர்ந்து கண்காணிக்குமாறும், மீறி வாகனங்களை ஓட்டினால் இளஞ்சிறார்களின் பெற்றோர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது சிறார்கள் பைக் ரேஸில் ஈடுபட்டால் பெற்றோர்கள், பாதுகாவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
பைக் ரேஸில் ஈடுபடுவோரிடம் நன்னடத்தை உறுதி மொழி பத்திரம் வாங்கப்படும் என்றும் நன்னடத்தை உறுதிமொழி பத்திரத்தை மீறி இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்திருக்கிறது.