தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பிரச்சனை இல்லை.. அடுத்த விசிட் திருப்பூர், கோவை - பீகார் குழு
தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று பீகார் குழு தெரிவித்துள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் வட மாநிலத்தை சேர்ந்தவர்களை தமிழர்கள் தாக்கும் வீடியோக்கள் பரவியது. இது முற்றிலும் போலியான வீடியோ என்று பிறகு உறுதிப்படுத்தப்பட்டது.
கடந்த இரு நாட்களாக அம்மாநில சட்டமன்றத்தில் பாஜக எம்எல்ஏக்கள் வீடியோ குறித்து 'பீகார் தொழிலாளிகளுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை' என்று குற்றம்சாட்டி அமளியில் ஈடுபட்டனர்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், 'இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி விளக்கமளித்துள்ளார். இக்குற்றச்சாட்டு உண்மை கிடையாது' என்று கூறினார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக பீகார் மாநில கிராம வளர்ச்சி துறை செயலாளர் பாலமுருகன் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்து பீகார் அரசு உத்தரவிட்டது. இந்த குழுவில் நுண்ணறிவு பிரிவு ஐஜி கண்ணன், தொழிலாளர் நலத்துறை சிறப்பு செயலாளர் ஸ்ரீ அலோக் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் இடம்பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க..Explained: தமிழகத்தில் வட இந்தியர்களை குறி வைத்து தாக்கும் தமிழர்கள்.. உண்மையா.? நடப்பது என்ன.? ஓர் அலசல்
இந்தக் குழுவினர் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியுடன் ஆலோசனை நடத்தினர். பீகார் அதிகாரிகள் குழு பிறகு செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அக்குழுவினர், “பீகாரிலிருந்து வந்து வேலை செய்யும் தொழிலாளர்களிடம் பேசினோம். அவர்கள் எந்த பிரச்சனையும் இன்றி தமிழ்நாட்டில் இருப்பதாகத் தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். சமூக வலைத்தளங்களில் பரவும் போலி வீடியோக்களை நம்பி ஏமாற வேண்டாம். அடுத்ததாக திருப்பூர், கோவைக்கு சென்று புலம்பெயர் தொழிலாளர்களை சந்திக்க உள்ளோம்” என்று கூறினர்.
இதையும் படிங்க..பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வேலைவாய்ப்பு.. 281 காலியிடங்கள் - விண்ணப்பிப்பது எப்படி.?
இதையும் படிங்க..AIADMK: அகம்பாவம்.. ஆணவம்.! அதிமுகவின் தோல்விக்கு துரோகி எடப்பாடி தான் காரணம் - கொந்தளிக்கும் ஓபிஎஸ்