பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிளம்பராக பணியாற்றிய ஊழியர் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார். 

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒரு மாதத்திற்கும் மேல் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை 4 கோடி பார்ப்பதாக இதன் தொகுப்பாளர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.அந்த அளவுக்கு பிக் பாஸ் தான் இப்போதைய டிரெண்டிங்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக சென்னையில் உள்ள ஈவிபி ஈவிபி ஃபிலிம் சிட்டிக்குள் 'செட்' போடப்பட்டுள்ளது. இங்கு பிளம்பராக பணியாற்றிய கரீம் இப்ராஹிம் ஷேக் என்பவர் இன்று திடீரென உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

உயிரிழந்த தொழிலாளி மும்பையை சேர்ந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

ஏற்கெனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இது மேலும் ஒரு தலைவலியா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.