பட்டித்தொட்டி எங்கும் பட்டயக்கிளப்பும் பிக்பாஸ் பரணி...! 2 நாட்காளாக புதுக்கோட்டை மக்களோடு தங்கி பேருதவி..!
நடிகர் பரணி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மேலும் பிரபலம் அடைந்தவர். ஒரு சிலரை பார்த்த உடன் பிடிக்கும்.. ஒரு சிலரை பார்க்க பார்க்க தான் பிடிக்கும் என்ற வசனத்திற்கு ஏற்ப பரணியின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.
நடிகர் பரணி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மேலும் பிரபலம் அடைந்தவர். ஒரு சிலரை பார்த்த உடன் பிடிக்கும்..ஒரு சிலரை பார்க்க பார்க்க தான் பிடிக்கும் என்ற வசனத்திற்கு ஏற்ப பரணியின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.
சமயம் கிடைக்கும் போதெல்லாம், ஏழை எளிய மக்களுக்கும் ஏழை மாணவர்களுக்கு பண உதவு செய்து அவர்காளின் படிப்பு தொடர பெரும் உதவி செய்து வந்தார். சமீபத்தில் கூட மதுரையில் நடந்த விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான ஷூ முதல் யூனிபார்ம் வரை அனைத்தும் வாங்கிக்கொடுத்தார்
இந்த நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கரம் நீட்ட தானே நேரில் சென்று, புதுக் கோட்டையிலேயே இரண்டு நாட்களாக தங்கி மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கினார். சென்னையிலிருந்து தனி வாகனம் மூலம் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, காய் கறிகள், மெழுகுவர்த்தி, ஆடைகள் என பல பொருட்களை எடுத்துக்கொண்டு புதுக் கோட்டை சென்ற பரணி, சுற்றி உள்ள இருபது கிராமங்களுக்கும் சென்று, அவரால் முடிந்த உதவிகளை செய்து உள்ளார்.
இவருடன் அவரது சில நாண்பர்கள் மற்றும் ரசிகர்கள் உதவியாக இருந்து உள்ளனர். மேலும் இந்த உதவி எல்லாம் அவர்களுக்கு போதாது என கருதிய பரணி, மேலும் உதவியை நாடி தனது நண்பர்களிடம் உதவும்படி கேட்டு உள்ளாராம்... அதன் பின் மீண்டும் இன்று பல பொருட்களுடன் நாளை காலை புதுக்கோட்டை செல்ல உள்ளதாக நமது ஏசியாநெட் நிருபரிடம் தெரிவித்து உள்ளார்.
பல விஐபிக்கள் நிவாரண பொருட்களை இங்கிருந்து அனுப்ப தொடங்கினாலும், பாதிப்புகள் எந்த அளவிற்கு உள்ளது என்பதை நேரில் சென்று பார்த்து, மக்களோடு மக்களாக இறங்கு நாட்கள் தங்கி அவர்களுக்கு உதவி செய்து வந்த பிக்பாஸ் பரணிக்கு வாழ்த்துக்கள் வந்த வந்த வண்ணம் உள்ளது. மேலும், தன்னை போலவே அதிக நபர்கள் மக்களுக்கு உதவு முன்வரவ வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்து உள்ளார். ஏனென்றால் பாதிப்புகள் அனைத்தும் ஒரே நாளில் சீரமையும் நிலையில் இல்லை என்பதே...!