Big Pass 2 did not participate - Aparnathi

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்கவீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற அபர்ணதி, பிக்பாஸ் 2-ல் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியால் நடத்தப்பட்ட எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட 16 பெண்களில் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் என்றால் அபர்ணதி தான். மனதில் பட்டதை உடனே வெளியில் பேசி விடுவதாலும், ஆர்யா மீது வைத்திருந்த காதலை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தியதாலும் இவருக்கு ஆதரவு தெரிவிக்க ஒரு ரசிகர் கூட்டமே உருவானது.

இவரின் செயல்கள் மற்ற போட்டியாளர்களுக்கு கோபத்தை கொடுத்தாலும் ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. 

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் இருந்து இவர் வெளியேறியதும் பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சியில் ஆர்யா மற்றும் ஒரு சில போட்டியாளர்களுடன் கலந்துக்கொண்டார், அப்போது பேசிய இவர், நான் நிகழ்ச்சியில் இருந்து மட்டும் தான் வெளியில் வந்திருக்கிறேன், இன்னும் நான் ஆர்யாவை காதலித்துக் கொண்டு தான் இருக்கிறேன். என்னை இன்னும் நான் மாற்றிக்கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.

ஆனால் நிகழ்ச்சியின் முடிவில் அபர்ணதிக்கு, மட்டும் அல்ல ஆர்யாவின் முடிவு அனைவருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்த மூன்று பெண்களையும் திருமணம் செய்துக்கொள்வதாக இல்லை என கூறி தப்பித்துக் கொண்டார்.

ஆர்யாவின் நினைவில் இருந்து தற்போது மெல்ல மெல்ல வெளியே வந்துக்கொண்டிருக்கும் அபர்ணதி, சில நகைக்கடை விளம்பரங்கள் மற்றும் திரைப்படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார். இந்த நிலையில் இவர், விரைவில் பிரபல தொலைக்காட்சியில் துவங்க உள்ள பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதுபோல் ஒரு புகைப்படம் வெளியானது.

இது குறித்து அபர்ணதியிடம், பிரபல வெப்சைட் நேர்காணல் நடத்தியது. அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு வந்ததாக கூறப்படுகிறதே? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அபர்ணதி, ஆமாம்... ஆனா எனக்கு விருப்பம் இல்ல. வேண்டாம்னு சொல்லிட்டேன். நானே சமைச்சு சாப்பிடுறதெல்லாம் என்னைப் பொருத்தவரை ரொம்ப கஷ்டமான காரியம். பிக் பாஸ் எனக்கு செட் ஆகாது என்று கூறியுள்ளார்.