Asianet News TamilAsianet News Tamil

சக்கிலியனுக்கு அழகான ஜெமினி கணேசன் மூஞ்சியா வேணும்…? பாரதிராஜாவின் வைரல் வீடியோ.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்

சக்கிலியனுக்கு அழகான ஜெமினி கணேசன் மூஞ்சியா வேணும்…? பாரதிராஜாவின் வைரல் வீடியோ.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்..

Bharathiraajaa caste video goes viral
Author
Chennai, First Published Nov 21, 2021, 8:01 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

சக்கலியனுக்கு அழகான ஜெமினி கணேசன் மூஞ்சியா வேணும் என்று இயக்குநர் பாரதிராஜா மேடை ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சைகளுக்கு வித்திட்டு உள்ளது.

Bharathiraajaa caste video goes viral

பொதுவாக பொங்கி எழும் சில விஷயங்கள்,சில பிரச்னைகள் தானாகவே ஆறி அடங்கி விடும். ஆனால் ஜெய்பீம் என்ற பெயர் தாங்கி வெளியாகி உள்ள நடிகர் சூர்யாவின் படம் பற்றிய செய்திகள் நாள்தோறும் புதுப்புது விஷயங்களை வெளிக்கொண்டு வருகிறது.

ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை இந்த படம் பெற்றிருந்தாலும் சாதிய வன்மத்துடன் சில காட்சிகள், கதாபாத்திரங்கள் வலிந்து திணிக்கப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

Bharathiraajaa caste video goes viral

குறிப்பாக வன்னிய சமூகத்தை பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாக கூறி பாமகவும், வன்னிய சங்கமும் போர்க் கொடி உயர்த்தின. அறிக்கைகள், கேள்விகள், போராட்டங்கள் என நாள்தோறும் பாமகவும், வன்னியர் சங்கமும், வன்னியர் சமுதாய மக்களும் ஜெய்பீமுக்கு எதிராக வரிந்து கட்டி வருகின்றனர்.

திரையுலகில் பல்வேறு நடிகர்கள், கலைஞர்கள் என ஆதரவு, எதிர்ப்பு மனநிலையில் இருக்கின்றனர். ஜெய்பீம் பட சர்ச்சையில் சூர்யாவின் பக்கம் நின்று இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அப்போது அக்னி குண்டம் காலண்டருக்கு பதிலாக தேவர் சமூகத்தை குறிப்பிடும் படியான காலண்டர் வைத்து கொள்ள ஒப்புக் கொள்வாரா? என்று நெட்டிசன்ஸ் கேள்விகளை போட்டு தாக்கினர்.

Bharathiraajaa caste video goes viral

ஆனால்…. இப்போது சாதிக்கு எதிராக பேசுவதாக அறிக்கை வெளியிட்டு உள்ள பாரதி ராஜாவுக்கு கடும் சிக்கல் எழுந்துள்ள வகையில் இணையத்தில் ஒரு வீடியோ உலா வர ஆரம்பித்துள்ளது. முதல் மரியாதை படத்தில் வரும் செங்கோடன் என்ற பட்டியலின கதாபாத்திரம் பற்றியும், அதன் உருவாக்கம் பற்றியும் அவர் பேசிய வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

இந்த படம் பற்றி படம் வெளியான தருணத்திலேயே பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. படத்தில் சிவாஜி கணேசனை வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பார். படக்காட்சிகள், பின்னணி இசை, பாடல்கள் என படம் வெற்றி பெற்று தேசிய விருதுகளையும் அள்ளியது.

Bharathiraajaa caste video goes viral

முதல் மரியாதை படத்தை பற்றி பாரதிராஜா பேசிய வீடியோ ஒன்றையும், இப்போது பூதாகரமாக போய் கொண்டிருக்கும் ஜெய்பீம் ஆதரவு நிலைப்பாடு பற்றியும் ஒரு வீடியோ இணையத்தில் சக்க போடு போடுகிறது.

அந்த வீடியோவில் ஏதோ ஒரு விழா மேடையில் தாம் இயக்கிய முதல் மரியாதை படம் பற்றி சில சம்பவங்களை பாரதிராஜா பேசுகிறார். அவர் அருகில் அவரது சிஷ்யனும், இயக்குநருமான பாக்யராஜ் நிற்கிறார்.

Bharathiraajaa caste video goes viral

பாரதிராஜா பேசியது இதுதான்: ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை இருக்கு…. இவன் இப்படி இருப்பான்… ஏன்னா சக்கிலியனுக்கு வந்த அழகான ஜெமினி கணேசன் மூஞ்சியா வேணும்? தேவையில்லை… போராடி இதை பத்தி பத்திரிகைகளில் எல்லாம் அப்ப எழுதியிருப்பேன் என்று பேசி இருக்கிறார்.

அதை இப்போது எங்கிருந்தோ தேடி பிடித்து எடுத்து வந்துள்ள நெட்டிசன்ஸ் இயக்குநர் பாரதிராஜாவை பிடித்து உலுக்கி வருகின்றனர். சாதி வெறி ஊறிய போன மனநோயாளி… மறைமுகமாக ஜெய்பீம் படத்தை ஆதரிக்கும் இவர்களின் உண்மை முகம் கிழிந்தது என்று பலரும் கருத்துகளை போட்டு தாக்கி வருகின்றனர்…!!

என் இனிய தமிழ் மக்களே என்று ஒவ்வொரு படத்தின் தொடக்கத்திலும் கைகூப்பிய படி வணக்கம் சொல்லி பேசும் இயக்குநர் பாரதிராஜா.. நெட்டிசன்கள் போட்டு தாக்கி வரும் இந்த சாதிய வன்ம வீடியோ குறித்து ஏதேனும் பதில் சொல்வரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது….!!

 

Follow Us:
Download App:
  • android
  • ios