Vande Bharat Train: கோவை – பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை.. நாளை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி.!
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள் நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது வந்தே பாரத் ரயில்கள். நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது மொத்தம் 30க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள வந்தே பாரத் ரயில் சேவை நாளை கோவை - பெங்களூரூ இடையே இயக்கப்பட உள்ளது. இதனை காணொலிக் காட்சி மூலமாக பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள் நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது வந்தே பாரத் ரயில்கள். நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது மொத்தம் 30க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க;- அயோத்தியில் ராமர் கோயிலுக்கு பிச்சைக்காரர்கள் கொடுத்த ரூ.4.5 லட்சம் நன்கொடை!
குறிப்பாக தமிழ்நாட்டில் சென்னை - மைசூரு, சென்னை - கோவை ஆகிய இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தென் தமிழக மக்களுக்காக நெல்லை - சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை அண்மையில் தொடங்கப்பட்டது. இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், கோவை - பெங்களூர் இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாளை முதல் கோவை-பெங்களூர் இடையே வந்தே பாரத் ரயில் தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலமாகத் தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான சோதனை ஓட்டம் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடைபெற்றது.