before taluk office village administration officers protest Demanding to fulfill the request ...
திருப்பூர்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் திடிரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், அவினாசி தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று திடிரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"ஆன்லைன் மூலம் வழங்கும் சான்றிதழ்களுக்கு இணையதள செலவு தொகை வழங்க வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைப்பெற்றது.
இந்தப் போராட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் வட்டச் செயலாளர் பார்த்தீபன் தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
இந்த போராட்டத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலரகள் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
