ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உச்சநீதிமன்றம் இடைகால தடை விதித்துள்ளது. ஆனால் பாஜகவினர் ஜல்லிக்கட்டு, போட்டி நடத்தப்படும் என கூறியுள்ளனர். இதை கண்டித்து பீட்டா அமைப்பினர் இன்று போராட்டம் நடத்துகின்றனர்.
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஆனால், தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நிச்சயம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று கூறி வருகின்றனர்.
இதனால் பீட்டா அமைப்பு ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு விலக்கக்கூடாது என்று கூறியுள்ளது. மேலும், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் இன்று போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. 'ரத்தமில்லாத ஜல்லிக்கட்டு' என்ற தலைப்பில் இந்த போராட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து, பீட்டா அமைப்பின் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி பூர்வா ஜோஷிபுரா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த இடைகால தடை விதித்துள்ளது. இந்த வேளையில், சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த கொடூரமான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஏதுவாக சட்டத்தில் திருத்தம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு விலக்கக்கூடாது. இது தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை நவம்பர் 9ம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார்.
