Asianet News TamilAsianet News Tamil

பி.இ. மாணவர் சேர்க்கை…. இன்று முதல் ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம்….

Anna university
be application
Author
First Published May 1, 2017, 7:50 AM IST


இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்பதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இன்று தொடங்கியுள்ளது.

 அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 550க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங்., மற்றும் ஆர்க்கிடெக்ட் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன.

இவற்றில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, தமிழக அரசு சார்பில், அண்ணா பல்கலைக்கழகத்தால்  நடத்தப்படும், ஒற்றைசாளர கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். வரும் கல்வி ஆண்டுக்கான கவுன்சிலிங், ஜூன், 27ல், தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம்  அறிவித்துள்ளது. 

அதன்படி இந்தக் கல்வியாண்டு (2017-18) பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளரக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இன்று முதல் ஆன்-லைன் மூலம் பதிவு செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

www.annauniv.edu என்ற இணையதள முகவரியில் ஆன்-லைன் மூலம் பதிவு செய்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமோ ஜூன் 3 ஆம் தேதிக்கும் அனுப்ப வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு (பி.இ.) சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.

இது குறித்த முக்கிய விபரங்களை பார்ப்போம்…

ஆன்-லைன் பதிவுக்கு கடைசி நாள்  31.5.2017ஆன்-லைன் பதிவு தொடக்கம்….. 01.05.2017

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள் 3.6.2017

சமவாய்ப்பு எண் வெளியீடு…20.6.2017

தரவரிசைப் பட்டியல் வெளியீடு ….22.6.2017

கலந்தாய்வு தொடங்கும் நாள்,,,, 27.6.2017

 

 

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios