Bankers Association Demonstration emphasis to Implement Bilateral Agreement
திருவாரூர்
திருவாரூரில், இருதரப்பு ஒப்பந்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி வங்கியாளர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் வங்கியாளர்கள் சங்கத்தினர் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
"11-வது இருதரப்பு ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தி இந்தியன் வங்கி அருகே இந்த ஆர்ப்பாட்டத்தை வங்கியாளர்கள் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் கௌரவத் தலைவர் பிச்சைக்கண்ணு தலைமைத் தாங்கினார்.
சங்க ஒருங்கிணைப்பாளர் ஜி. மணிகண்டன், பாரத ஸ்டேட் வங்கியைச் சேர்ந்த சிவகுமார், லெட்சுமி விலாஸ் வங்கி சார்பில் சிவா, பாங்க் ஆப் பரோடா சார்பில் ஜி. ராஜகுமார், கரூர் வைசியா வங்கியைச் சேர்ந்த சுரேஷ், காப்பீட்டுக் கழகம் யேசுதாஸ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
இதில், மன்னார்குடி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள பல்வேறு வங்கிகளைச் சேர்ந்த வங்கியாளர் சங்கத்தினர் பங்கேற்று தங்களது கோரிக்கைக்கு வலுசேர்த்தனர்.
