ஆடிப்பெருக்கு அன்று காவிரி ஆற்றில் குளிக்க, செல்பி எடுக்கத தடை... காரணம் இதுதான்!!
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் ஆற்றில் குளிக்கவும் செல்பி எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் ஆற்றில் குளிக்கவும் செல்பி எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகள் நிரம்பியது. இதனை தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது. அதுமட்டுமின்றி காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாகவும் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணாமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்தானது அதிகரித்தது கொண்டே வருகிறது.
இதையும் படிங்க: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆக.5 முதல் கலந்தாய்வு... நாளை வெளியாகிறது தரவரிசை பட்டியல்!!
நேற்று காலை 42,000 கனஅடி நீர்வரத்தனது வந்துகொண்டிருந்த நிலையில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து இன்று மலை 5 மணிக்கு மேட்டூர் அணைக்கு வரக்கூடிய தண்ணீரின் நீர்வரத்தனது 86,000 கனஅடியாக அதிகரித்ததுள்ளது. இதில் 85,000 கனஅடி நீர் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. 500 கனஅடி நீர் கால்வாய் பாசனத்திற்காக வெளியேற்றபடுகிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் 85,000 கனஅடி தண்ணீரில் 23,000 கனஅடி நீர் நீர் மின் நிலையங்கள் வழியாகவும், மேட்டூர் அணையில் உள்ள 16 கண் மதகுகள் வழியாக 52,000 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 4 ஆயிரம் கோடியை ஏமாற்றிய சுரானா குழுமம்.. 113 கோடியை முடக்கிய அமலாக்கத்துறை !
இதனிடையே காவிரி கரையோர பகுதிகளில் ஆடி 18 விழா வெகு சிறப்பாக கொண்டாப்படும் சூழலில் நாளை காவிரி ஆற்றில் ஏராளமான பொதுமக்கள் குளிக்க வருவார்கள். ஆனால் காவிரி ஆற்றை பொறுத்தவரை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையை பொறுத்தவரை 85,000 கனஅடி நீர் வந்துகொண்டுள்ளது. இந்த நீர்வரத்தனது அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. அதனால் பொதுமக்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள பகுதிகளில் மட்டுமே சென்று நீராடவேண்டும் மற்ற இடங்களுக்கு மக்கள் யாரும் நீராட செல்ல கூடாது என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார். காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் யாரும் ஆற்றங்கரையோரம் சென்று செல்பி எடுக்க கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 24 மணி நேரமும் வருவாய்துறை, நீர்வளத்துறை, காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.