அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆக.5 முதல் கலந்தாய்வு... நாளை வெளியாகிறது தரவரிசை பட்டியல்!!
தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்சி. உள்பட படிப்புகளில் இருக்கும் ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பப்பதிவு கடந்த ஜூன் 22 ஆம் தேதி முதல் தொடங்கியது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பப்பதிவு செய்ய கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி கடைசி நாளாக இருந்தது.
இதையும் படிங்க: 4 ஆயிரம் கோடியை ஏமாற்றிய சுரானா குழுமம்.. 113 கோடியை முடக்கிய அமலாக்கத்துறை !
மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு 4 லட்சத்து 7 ஆயிரத்து 45 விண்ணப்பங்கள் பதிவானது. இதில் 3 லட்சத்து 34 ஆயிரத்து 765 விண்ணப்பங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு இருப்பதாகவும், அவற்றில் 2 லட்சத்து 98 ஆயிரத்து 56 விண்ணப்பங்களுக்கு கட்டணங்கள் செலுத்தியிருப்பதாகவும் உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: குரூப் 1 தேர்வில் மாஸ் காட்டிய பெண்கள்... 66 இடங்களில் 57 இடங்களில் பெண்களே வெற்றி!!
இந்த நிலையில் தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் நாளை வெளியிட உள்ளதாகவும் கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.