ban for homage in marina

ஈழப்போர் நினைவேந்தல் நடத்த மே 17 இயக்கத்திற்கு போலீசார் தடை விதித்துள்ளநிலையில் மெரீனாவில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலைக்கு அருகில் இன்று மாலை தமிழீழப் படுகொலைக்கான நினைவேந்தல் என்ற பெயரில் நிகழ்வு ஒன்றை நடத்த மே 17 இயக்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதற்கு காவல்துறை தரப்பில் இருந்து அனுமதி கிடையாது என்று கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், மெரீனாவில் 2003 ஆண்டில் இருந்து போராட்டம் நடத்த தடை விதிக்கபடுள்ளதாகவும், சட்ட விதிகளை மீறி போராட்டம் நடத்துபவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கபட்டிருந்தது.

இதையடுத்து சென்னை மெரீனா கடற்கரையில் உழைப்பாளர் சிலையில் இருந்து கண்ணகி சிலை வரையுள்ள சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மெரீனா கடற்கரையில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.