ஆழ்கடல் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் தொடங்கியது. இதனையொட்டி, வலைகள், படகுகள் பராமரிப்புப் பணிகளில் விசைப்படகு மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். 

மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு, வங்காள விரிகுடா கடல் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ம் தேதி தொடங்கி 45 நாட்களுக்கு ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. 

இந்த தடைக்காலம் நள்ளிரவு முதல் தொடங்கியது. தடைக்காலத்தையொட்டி, வலைகள், படகுகள் பராமரிப்புப் பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். 

ராமநாதபுரம், புதுக்கோட்டை தூத்துகுடி, நாகை, சென்னை உள்ளிட்ட 13 மீன்பிடி மாவட்டங்களிலும் சுமார் 5 ஆயிரத்து 600 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

தடைக்காலத்தை 60 நாட்களாக உயர்த்துவது குறித்த திட்டம் பரிசீலிக்கப்பட்டுவரும் நிலையில், மீன்பிடி தடை கால நிவாரணம் 5 ஆயிரம் ரூபாயை தடை காலத்திலேயே அளிக்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.