சேலம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில்
இருந்த ஆண் குழந்தை திருடு போன சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் நீர்முல்லிக்குட்டை அருகே உள்ள ராஜாபாளையம் பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுனர் வெங்கடேசன். இவரது மனைவி இந்து.இந்நிலையில், கர்ப்பிணியாக இருந்த இந்துவிற்கு சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த 24ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் ஆண்குழந்தை பிறந்துள்ளது.

இந்தநிலையில், நேற்று இந்து அருகில் இருந்தவர்களிடம் தனது குழந்தையை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு கழிவறைக்கு சென்றுள்ளார்.

சிறிதுநேரம் கழித்து திரும்பிவந்து பார்த்தபோது படுக்கையில் இருந்த குழந்தை காணாமல் போனததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிரா பதிவுகளை சோதனை செய்ததனர். அப்போது கர்ப்பிணி போன்ற தோற்றத்தில் வந்த பெண், இந்துவின் குழந்தையை திருடிச்சென்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குழந்தையை திருடி சென்ற பெண் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையை மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியம் காரணமாக இந்த தவறு நடந்துள்ளது என்றும், பணியில் அலட்சியமாக இருந்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துமனை டீன் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் குழந்தை திருடு போன இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.