சென்னையில் கல்லூரி மாணவி அஸ்வினி கொலை வழக்கில் கைதான அழகேசன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் கல்லூரி மாணவி அஸ்வினி. இவர் கே.கே.நகர் மீனாட்சி கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். 

இந்நிலையில் இன்று வழக்கம்போல் அஸ்வினி கல்லூரிக்கு சென்றார். கல்லூரி முடித்துவிட்டு சில மணி நேரத்திற்கு முன்பு கல்லூரி வாயிலின் வெளியே நின்று கொண்டிருந்தார். 

அப்போது திடீரென அஸ்வினியை ஒரு நபர் கத்தியால் குத்தினார். இதில் மாணவி ரத்தம் வெளியேறி உயிருக்கு போராடினார். 

இதைப்பார்த்த பொதுமக்கள் அஸ்வினியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

மேலும் மாணவியை கத்தியால் குத்திய நபரை அங்கிருந்தவர்கள் சுற்றி வளைத்து பிடித்து அடித்து போலீஸில் ஒப்படைத்தனர். 

இந்நிலையில், அஸ்வினி மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் எனவும் கொலையாளி பெயர் அழகேசன் எனவும் அவரும் மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது. 

மேலும் அழகேசனை காதலித்து ஏமாற்றியதால் இந்த நிகழ்வு அரங்கேறியுள்ளதாகட் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதையடுத்து  எம்ஜிஆர் நகர் காவல்நிலையத்தில் விசாரணை முடிந்த பின் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நீதிபதி மோகனா இல்லத்தில் அழகேசனை போலீசார் ஆஜர்படுத்தியுள்ளனர்.