Asianet News TamilAsianet News Tamil

கட்டிங் ஒட்டிங் செஞ்ச நீங்க இத மறந்துட்டீங்களே! மதன் வெளியீட்ட வீடியோவுக்கு பதில் சொன்ன அய்யப்பன் ராமசாமி

பிரபல யூடியூப் நிகழ்ச்சித் தொகுப்பாளர் அய்யப்பன் ராமசாமி ஒரு கட்சியிடம் லஞ்சம் பெற்றதாக மதன் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள வீடியோ நெட்டிசன்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ayyappan Ramasamy replied to the accusations made against him by Madan Ravichandran
Author
First Published Mar 16, 2023, 4:44 PM IST

யூடியூப் சேனலில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக செயல்பட்டுவரும் அய்யப்பன் ராமசாமி, ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களை இழிவுபடுத்த செய்திகளை வெளியிட லஞ்சம் பெற்றார் என்று குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது. அதற்கு அய்யப்பன் ராமசாமி பதில் அளித்துள்ளார்.

அய்யப்பன் ராமசாமி பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களைக் காட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பல்வேறு தனியார் செய்திச் சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராகப் பணிபுரிந்து மதன் ரவிச்சந்திரன் தான் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளின்போது ஏறுக்குமாறாக கேள்விகளைக் கேட்பதிற்கு பேர் போனவர் மதன் ரவிச்சந்திரன். இவர் பாஜகவில் சேர்ந்து, கட்சியினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கொஞ்ச காலத்திலேயே கட்சியில் இருந்து விலகினார். அதற்குப் பின் இருக்கும் இடம் தெரியாமல் அடக்கி வாசித்த மதன் இப்போது யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார். அந்தச் சேனலில் வெளியாகியுள்ள அய்யப்பன் ராமசாமி பற்றிய வீடியோ மூலம் மீண்டும் தன் மீது கவனத்தை ஈர்த்துள்ளார்.

2 ஆண்டு இழுபறிக்குப் பின் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டி தேர்வு

அய்யப்பன் ராமசாமியும் நெட்டிசன்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருப்பவர். அவர் யூடியூப் சேனல் நடத்தும் நிறுவன்ம ஒன்றில் அரசியல், சினிமா துறைகளைச் சேர்ந்த பிரபலங்களை பேட்டி எடுத்து புகழ்பெற்றவர். குதர்க்கமாக கேள்விகள் கேட்டு பேட்டி கொடுப்பவரை வாயடைக்க வைப்பதில் கைதேர்ந்தவர். இவர் குறிப்பிட்ட கட்சியிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு அந்தக் கட்சிக்கு வேண்டாத நபர்கள் மீது அவதூறு கிளப்பி, அவர்களை இழிவுபடுத்த அந்தக் கட்சியிடம் இருந்து பணத்தை லஞ்சமாகப் பெற்றதாக மதன் தன் வீடியோவில் குற்றம் சாட்டுகிறார்.

மதன் ரவிச்சந்திரன் தன் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக அய்யப்பன் ராமசாமி அந்தக் கட்சிப் பிரமுகரை ஓட்டலில் சந்தித்துப் பேசும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அய்யப்பன் ராமசாமி இன்ஸ்டாகிராமில் தன்னைப் பின்தொடர்பவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்க்ள என்று கூறும் காட்சி உள்ளது. இதேபோல கட்சிப் பிரமுகர் தங்கள் எதிரிகளை நீங்கள் தாறுமாறாக இழிவுபடுத்த வேண்டும் என்று சொல்வதற்கு அவர் சம்மதம் தெரிவித்து பணத்தை வாங்கிக்கொள்ளும் காட்சியும் வீடியோவில் இடம்பெறுகிறது. இதுமட்டுமின்றி அய்யப்பன் ராமசாமி பெண்களைப் பற்றி கொச்சையாகப் பேசுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

மதன் ரவிச்சந்திரனின் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்த வீடியோ தமிழ்நாட்டு ஊடகவியலாளர்களை அம்பலப்படுத்தும் தொடர் முயற்சியில் ஒன்று என மதன் கூறி இருக்கிறார். எனவே, இதுபோல தொடர்ச்சியாக பலரைப் பற்றிய வெளிவராத தகவல்கள் வெளிச்சத்துக்கு வரக்கூடும் என்று நெட்டிசன்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அய்யப்பன் ராமசாமி பற்றிய வீடியோவைப் நெட்டிசன்கள் பலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தங்கள் கருத்தைப் பதிவுசெய்து வருகிறார்கள்.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பற்றி கூகுளில் தேடியவருக்கு மரண தண்டனை

இதனிடையே இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அய்யப்பன் ராமசாமியும் பதில் அளித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "கட்டிங் ஒட்டிங் செஞ்ச நீங்க பின்னாடி இருக்குற CCTV-ஐ மறந்துட்டீங்களே... Soon" என்று குறிப்பிட்டுள்ளார். தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விரைவில் வீடியோ மூலம் பதில் சொல்லப்போவதாக சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவில் கமெண்ட் செய்துள்ள பெண் ஒருவர், அய்யப்பன் ராமசாமி பெண்களை அது, இது என்று குறிப்பிட்டுப் பேசியதையும் சாப்ட்ருவாங்க என்று கொஞ்சைப்படுத்தும் வகையில் கூறியதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கண்டித்துள்ளார்.

மதன் வெளியிட்ட வீடியோ பற்றி ட்வீட் செய்த ஒருவர், "மதன் வீடியோவில் அய்யப்பன் ராமசாமியை பார்த்து ஏன் இவ்வளவு ஷாக் ஆகிறீர்கள் என புரியவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை மதன், கிஷோர் ஐய்யப்பன் மூவரும் தனியார் தொலைக்காட்சியில் ஒன்றாக பணி புரிந்தவர்கள். அங்கேயே இதேபோல் கொடுக்கல் வாங்கல் தகராறில் தான் மூவருக்கும் சண்டை வந்து ஐய்யப்பன் வெளியேறி கொஞ்ச நாள் சும்மா இருந்து, அந்த யூ ட்யூப் சேனலில் இணைந்தார். அந்த நேரத்தில் மூவருக்கும் முகநூலில் பெரிய சண்டையே வந்தது. இதை பலர் அறிவர்" என்று கூறியுள்ளார்.

எழுத்தாளர்களுக்கு ரூ.4,000 மாதாந்திர உதவித்தொகை வழங்கும் தமிழக அரசு: விண்ணப்பிப்பது எப்படி?

Follow Us:
Download App:
  • android
  • ios