2 ரவுடிகளை என்கவுன்டர் செய்தது ஏன்? இவர்களுக்கு இதுதான் பொழப்பு.. காவல் ஆணையர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியும், கூலிப்படை தலைவனுமான முத்து சரவணன் மற்றும் சண்டை சதீஷ் இருவரும் புதூர் மாரம்பேடு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

Avadi Police Commissioner explains about the encounter

ரவுடிகள் முத்துசரவணன் மற்றும் சதீஷை தனிப்படை போலீசார் பிடிக்க முயன்றபோது, அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இருவரும் குண்டு பாய்ந்து இறந்ததாக ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் கூறியுள்ளார். 

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற என்கவுண்டர் சம்பவம் தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.  செங்குன்றத்தை அடுத்துள்ள பாடியநல்லூரைச் சேர்ந்தவர் பார்த்திபன் (53). இவர் அதிமுக அம்மா பேரவையில் மாவட்ட இணைச் செயலாளர் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபயிற்சி மேற்கொண்ட போது வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.  

Avadi Police Commissioner explains about the encounter

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியும், கூலிப்படை தலைவனுமான முத்து சரவணன் மற்றும் சண்டை சதீஷ் இருவரும் புதூர் மாரம்பேடு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அதிகாலை சுற்றி வளைத்து கைது செய்ய முயன்ற போது போலீஸ் அதிகாரிகளை தாக்கிவிட்டு தப்பிச்செல்ல முயன்றனர். அப்போது போலீசார் தற்காப்புக்காக சுட்டதில் முத்து சரவணன் மற்றும் சண்டை சதீஷ் ஆகியோர் உடலில் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். 

Avadi Police Commissioner explains about the encounter

இதனிடையே என்கவுண்டர் நடந்த இடத்தில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் நேரில் ஆய்வு செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- ரவுடிகள் துப்பாக்கிகளால் காவல்துறையினரை நோக்கி சுட்டனர். காவல்துறையினர் தற்காப்புக்காக சுட்டதில் ரவுடிகள் இருவரும் குண்டு பாய்ந்து இறந்தனர். ரவுடிகளால் தாக்கப்பட்ட காவலர் 3 பேர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Avadi Police Commissioner explains about the encounter

கூலிப்படை தலைவன் முத்துசரவணன் 6 கொலை வழக்குகள், 2 கொலை முயற்சி வழக்குகள் மற்றும் 8 வழிப்பறி கொள்ளை வழக்குகள் உள்ளது. இவரது நெருங்கிய கூட்டாளி சண்டே சதீஷ் என்பவர் மீது 5 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சி வழக்கும், 4 வழிப்பறி வழக்குகளும் இருக்கின்றன. இவர்களுக்கு முக்கியமான தொழில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிம் மிரட்டி பணம் பறிப்பதும். பணம் கொடுக்காதவர்களை கொலை செய்வது தான் என்றார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios