யார் ஆவடி மாநகராட்சியை கைப்பற்றுவது என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி ஆவடி மாநகராட்சியில் 6 இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.. அதன் முழுமையான உடனடி லைவ் அப்டேட்ஸ் இதோ உங்களுக்காக..

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆவடி மாநகராட்சியை எந்தக் கட்சி கைப்பற்றி வாகை சூடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

தற்போது ஆவடி மாநகராட்சி முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்கிறது. இந்த தேர்தலில் மேயர் பதவி யாருக்கு என்று இரு கட்சியினர் இடையே போட்டி நிலவி வருகிறது.

இந்த முறை மேயர் பதவியை திமுக தக்க வைக்க வேண்டும் என்று தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளது. அதிமுக இதில் நிலைபாடு என்ன என்பது பொதுமக்கள் மத்தியில் இன்று வரை தெரியாத நிலைமை ஏற்பட்டு வருகிறது. யார் வெற்றிபெறுவார்கள் என்றும் கேள்வி எழுந்து இருக்கிறது.

எனவே இந்தமுறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆவடி பகுதி வாக்காளர்கள் யாருக்கு ஆதரவு தரப் போகின்றனர் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி ஆவடி மாநகராட்சியில் 6 இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. அவற்றின் முழுமையான உடனடி லைவ் அப்டேட்ஸ் அறிந்துகொள்ள ஏசியாநெட் தமிழை தொடர்ந்து படியுங்கள்.