"மலிவு மனப்பான்மை கொண்ட ஏ.வி.ராஜு".. தமிழக அரசு ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? குமுறிய காயத்திரி ரகுராம்!
Gayathri Raguramm : அதிமுகவின் முன்னாள் ஒன்றிய செயலாளரான ஏ.வி. ராஜு பேசிய சர்ச்சை பேச்சு இப்பொது தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.
சில தினங்களுக்கு முன்பு அதிமுகவிலிருந்து அண்மையில் நீக்கப்பட்ட முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜு அவர்கள், எடப்பாடி பழனிசாமி அவர்கள் மீது பல குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக பிரபல நடிகை ஒருவர் குறித்து மிகவும் கொச்சையான விஷயம் ஒன்றை அவர் செய்தியாளர் சந்திப்பில் பேசியது இப்பொழுது மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் சங்கம் இந்த விஷயத்தில் உடனே தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கூறிவரும் நிலையில் அண்மையில் பாஜகவில் இருந்து விலகி, தற்பொழுது அதிமுகவில் இணைந்துள்ள பிரபல நடிகை காயத்ரி ரகுராம் அவர்கள் இந்த விவகாரத்தில் தனது கருத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கு ஏற்றம் அல்ல.. ஏமாற்றம் தரும் வேளாண் நிதிநிலை அறிக்கை.. ராமதாஸ் விமர்சனம்.!
அவர் வெளியிட்ட பதவில் "நடிகர்களை தரக்குறைவாக பேசிய இவர் மீது நடிகர் சங்கம் நிச்சயம் வழக்கு தொடர வேண்டும்" என்று அவர் கூறியிருக்கிறார். "அதேபோல ராஜு இந்த மனநிலையுடன் சென்று பாஜகவில் இணைந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். அத்தகையவர்களை அவர்கள் வரவேற்பார்கள்" என்று கூறியுள்ளார்.
மேலும் "NCW இதைக் கண்டு அமைதியாக இருக்கிறது, குஷ்பமும் இதுவரை எதுவும் பேசவில்லை. ஒரு நடிகையாக நான் வருத்தப்படுகிறேன். இது போன்ற மோசமான கருத்துக்களை எதிர்கொள்ளும் எந்த நடிகைக்கும் நான் துணை நிற்பேன்" என்று அவர் தனது பதிவில் கூறியுள்ளார். அது மட்டும் அல்லாமல் இந்த மலிவு மனப்பான்மை கொண்ட நபருக்கு ஏன் திமுகவை சேர்ந்த ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது.
"ஏன் அவரை நடிகைகள் மற்றும் பெண்களை பற்றி மலிவாக பேச அனுமதித்தார்கள், இப்படிப்பட்டவர்களை தடை செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை" என்றும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.