"அந்த டாப் நடிகை தான் வேண்டும்.. அடம்பிடித்த எம்.எல்.ஏ" - பரபரப்பை கிளப்பிய ஏ.வி ராஜு - கொந்தளித்த கோலிவுட்!

Kollywood Against A.V Raju : கூவத்தூரில் உள்ள விடுதி ஒன்றில் கடந்த 2017ம் ஆண்டு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பலர், ஒரு வாரத்துக்கும் மேலாக அங்கு தங்க வைக்கப்பட்ட விஷயம் அனைவரும் அறிந்ததே. 

sacked admk member av raju shocking statement about leading kollywood actress ans

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சேலம் மாவட்டத்தின் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி ராஜு அவர்கள் அளித்த ஒரு பரபரப்பான பேட்டி தான் தற்பொழுது ஹாட் நியூஸாக மாறி உள்ளது என்றே கூறலாம். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ராஜு அவர்கள், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மீது தொடர்ச்சியான பல புகார்களை முன்வைத்து வந்தது அனைவரும் அறிந்ததே. 

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவர் அளித்த ஒரு பேட்டியில், கடந்த 2017 ஆம் ஆண்டு கூவத்தூரில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் சுமார் ஒரு வாரம் காலத்திற்கு மேல் தங்கியிருந்தனர். அப்பொழுது அதிமுக எம்எல்ஏ ஒருவர் தனக்கு "அந்த ஒரு டாப் நடிகை தான் வேண்டும்" என்று கூறியதாக வெளிப்படையாக அந்த நடிகையின் பெயரை குறிப்பிட்டு மிகவும் கொச்சையாக பேசியுள்ளார். 

என்னோட சாவுக்கு கலெக்டர் தான் காரணம்; ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற ஊராட்சி மன்ற தலைவரால் பரபரப்பு

இளம் நடிகை தான் வேண்டும் என்று அந்த எம்எல்ஏ அடம்பிடித்ததாகவும், பின்னர் ஒரு பிரபல நடிகர் தான் அந்த நடிகையை கூவத்தூர் அழைத்து வர முயற்சிகள் மேற்கொண்டதாகவும், அந்த நடிகரின் பெயரையும் குறிப்பிட்டு பேசியுள்ளார் ஏ.வி. ராஜு. அந்த நடிகைக்கு 25 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். 

இந்நிலையில் ராஜுவின் இந்த சர்ச்சையான பேச்சு கோலிவுட் உலகத்தில் மிகப்பெரிய பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பேசியுள்ள இயக்குனரும், நடிகருமான சேரன் அவர்கள், "வன்மையாக கண்டிக்கிறேன், எந்த ஆதாரமும் இன்றி பொதுவெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவர் மீது சட்டமும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்". 

"நடிகர் சங்கம் இதற்கு தகுந்த பதில் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்", என்று கூறி விஷால் மற்றும் கார்த்தியை அந்த பதிவில் டேக் செய்து தனது பதிவினை முடித்துள்ளார் சேரன். கோலிவுட் உலகில் புகழின் உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகையை குறித்த அவதூறு பேச்சை பரப்பி இருக்கும் ஏ.வி ராஜு அவர்களுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுந்து வருகின்றன. 

வளர்ச்சிக்கு வழிவகுக்கும் சிறப்பான வேளாண் நிதிநிலை அறிக்கை - வைகோ பாராட்டு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios