கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு.. நிதியுதவி குறித்து அமைச்சர் சொன்ன குட்நியூஸ்
கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி குறித்து மருத்துவ அமைச்சர் மா. சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் மூலம் ஏழை கர்ப்பிணி தாய்மார்களின் முதல் பிரசவத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த நிதியுதவி வழங்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது. சுமார் 3.75 லட்சம் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : உறவுகளை பேணுவதில் இந்தியா முதலிடம்.. இந்த நாடுகளில் தான் விவாகரத்து வழக்குகள் அதிகம்..
இந்த நிலையில் தற்போது கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி குறித்து மருத்துவ அமைச்சர் மா. சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “ தமிழகத்தில் தற்போது வரைக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படுவதில் தாமதம் ஆகிவிட்டது. எனவே கூடிய விரைவில் கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது..” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க : கருணாநிதி ஆட்சி கால அரசாணையையே நிறைவேற்றாத ஸ்டாலின்.! தேர்தல் வாக்குறுதியை எப்படி நிறைவேற்றுவார்.? ஓபிஎஸ்