ஷாக்கிங் நியூஸ்.. நீ எந்த ஊர்? என்ன ஜாதி? கேட்டு பள்ளி மாணவன் மீது கொடூர தாக்குதல்..!
மயிலாடுதுறையில் பேருந்துக்காக காத்திருந்த பள்ளி மாணவனை எந்த ஜாதி என்று கேட்டு தாக்கிய தொழிலாளியை போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
மயிலாடுதுறையில் பேருந்துக்காக காத்திருந்த பள்ளி மாணவனை எந்த ஜாதி என்று கேட்டு தாக்கிய தொழிலாளியை போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே வல்லம் கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவன் நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீடு திரும்புவதற்காக கீழநாஞ்சில்நாடு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர் மாணவன் அருகில் வந்து நீ எந்த ஊர்? என்ன ஜாதி? என்று கேட்டுள்ளார்.
இதையும் படிங்க;- சினிமாவை மிஞ்சிய பயங்கரம்! விபத்தில் தூக்கி வீசப்பட்ட தாய்! மகனை மார்போடு அனைத்து காப்பாற்றி உயிரை விட்ட தாய்
அப்போது, தாழ்த்தப்பட்ட ஜாதி என்று சொன்னதும் அந்த நபர் மாணவனை கடுமையாக தாக்கியுள்ளார். உடனே அப்பகுதியில் இருந்தவர்கள் பள்ளி மாணவனை அந்த நபரிடம் மீட்டு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காயமடைந்த மகனை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு தாக்கிய நபரையும் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், மாணவனை தாக்கிய கீழநாஞ்சில்நாடு அப்பகுதியை சேர்ந்த பந்தல் தொழிலாளி நடராஜன்(55) என்பவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது ெசய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க;- மிஸ்டு காலில் உருவான கள்ளக்காதல்! புருஷன், பசங்களை உதறி தள்ளிவிட்டு சென்ற பெண்ணின் நிலைமையை பார்த்தீங்களா.?