மோகன் லாசரஸ் ஆதரவாளர்களுக்கு அடி உதை!! நாகர்கோவிலில் பரபரப்பு...

இந்து கோயில்கள் பற்றியும், இந்து கடவுள்களைப் பற்றியும் இழிவாக பேசியதால் கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸ் ஆதரவாளர்களை அடித்தும், வாகனத்தையும் உடைத்து  சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Attack at nagarkoil for Mohan lasarus Supporters

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியைச் சேர்ந்தவர் கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸ். கோயில்கள் மற்றும் இந்து மதம் குறித்து அவதூறாக பேசும் வகையிலான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், இந்து கோயில்கள் பற்றியும், இந்து கடவுள்களைப் பற்றியும் இழிவாக பேசியுள்ளார். 

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் சாத்தான்களின் இருப்பிடம் அதிகமாக உள்ளது என்றும் தமிழகத்தில் கோயில்கள்தான் சாத்தான்களின் அரண்கள் எனப் பேசினார். அவரது இந்த பேச்சு, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

Attack at nagarkoil for Mohan lasarus Supporters

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் மைலாடியில் வரும் 5,6,7  ஆகிய தினங்களில் கிறிஸ்தவ போதகர் மோகன் லாசரஸ் கலந்து கொள்ள இருக்கும் ஆசிர்வாத பெருவிழா நிகழ்சி தொடர்பாக விளம்பரம் செய்வதற்காக வருகை தந்த இளைஞர்களை தாக்கியதோடு கல்லுக்கட்டி பகுதியில் அவர்கள் வந்த வாகனத்தையும் உடைத்து சேதம். காயபட்டவர்கள் அரசு மருத்துவ மனையில் அனுமதி. தாக்குதல் நடத்திய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Attack at nagarkoil for Mohan lasarus Supporters

கிறிஸ்தவ போதகர் மோகன் லாசரஸ் இந்து மதத்தை தவறுதலாக பேசியதாக கூறி   கன்னியாகுமரி மாவட்டத்தில்  பல்வேறு காவல் நிலையங்களில் பலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யபட்டு உள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios