500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என திடீரென அறிவித்தார் பிரதமர் மோடி.இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். பணப்பறிமாற்றம் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அன்றாட செலவுகளுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டது.

ஒரு நாள் வங்கி விடுமுறை , இரண்டு நாள் ஏடிஎம் விடுமுறை பின்னர் எல்லாம் சரியாகும் என்றார்கள். ஆனால் முதல் நாள் வங்கியில் 2000 மாற்றித்தரப்பட்டது.

இன்று ஏற்கனவே சொன்னப்படி ஏடிஎம் திறக்கும் பணம் எடுக்கலாம் என்று வந்த பொதுமக்களுக்கு நாடுமுழுதும் ஏமாற்றமே காத்திருந்தது. 60 முத்ல் 80 சதவிகித ஏடிஎம்கள் வேலை செய்யவில்லை.

பல ஏடிஎம்கள் திறக்கப்படவே இல்லை. திறந்திருக்கும் ஏடிஎம்களிலும் நூறு ரூபாய் நோட்டுகள் மட்டுமே வந்தது. அங்கு பெரிய வரிசையில் கியூவில் பொதுமக்கள் நிற்கும் நிலை ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணம் 2000 ரூபாய் நோட்டுகள் வைக்கும் டெக்னாலஜிக்கு ஏடிஎம் எந்திரங்கள் மாற்றப்படாததும், புதிய 500 ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டுக்கு வராததுமே என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் அதிக அளவில் ஏடிஎம் எந்திரங்களை கொண்டுள்ள எஸ்பிஐ ஏடிஎம் கள் சரியாக செயல்பட 10 நாட்கள் ஆகும் என அதன் தலைமை அதிகாரி பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார். இதற்கு காரணம் ஏடிஎம் எந்திரங்களுக்கு 2000 ரூபாய் வைக்கும் சாஃப்ட்வேர் இன்னும் செய்யப்படவில்லை.

கோடிக்கணக்கான ஏடிஎம் எந்திரங்கள் ஒரே நாளில் இந்த டெக்னாலஜியை கொண்டு வருவது சாத்தியமில்லை என்று கூறியுள்ளார். ஆகவே 2000 ரூபாய் நோட்டுகள் வராது. அதே போல் புதிய 500 ரூபாய் நோட்டுகளும் வரவில்லை. இதனால் 100 ரூபாய் நோட்டுகள் மட்டுமே அளிக்ககூடிய ஏடிஎம் இயந்திரங்கள் மட்டுமே வேலை செய்யும் என்று கூறியதை கவனிக்க வேண்டும். 

சென்னையில் இன்று ஏடிஎம்கள் திறந்திருக்கும் பணம் எடுக்கலாம் என நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.