ராமேஸ்வரம் பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த சூறாவளி காற்று வீசிவருவதுடன் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமேஸ்வரம் இந்துக்களின் புனித தலமாகும். காசி செல்பவர்கள் கண்டிப்பாக ராமேஸ்வரம் வந்து ராமநாதசுவாமியை வணங்கி செல்வார்கள். அன்றாடம் நாள்தோறும் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது ராமேஸ்வரத்திற்கு வருவது வழக்கமாகும். 

இங்குள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் நீராடுவது வழக்கமான ஒன்றாகும். ராமேஸ்வரம் பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த சூறாவளி காற்று வீசிவருவதுடன் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராட வரும் பக்தர்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாகவே வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு..எது தாழ்ந்த சாதி ? சர்ச்சையில் சிக்கிய பெரியார் பல்கலை.. தமிழக அரசு அதிரடி உத்தரவு !

காற்று வீசி வருவதுடன் மட்டுமல்லாமல், கடல் சீற்றமாகவே காணப்பட்டு வருகின்றது. இதனால் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாம்பன் தென் கடல் பகுதியில் இன்று வழக்கத்திற்கு மாறாக பல அடி தூரம் கடல் உள்வாங்கி காணப்பட்டதால் கடலில் உள்ள பாறை, பாசி, சிப்பி, சங்கு உள்ளிட்டவைகள் தெளிவாக வெளியே தெரிந்தன. இது இயல்பான ஒன்றுதான் என மீனவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகளுக்கு..மீண்டும் அதிமுகவில் சேர்கிறார் ஓபிஎஸ்? பதறிய எஸ்.பி வேலுமணி.. இதுதான் ஒரே வழி!