சென்னையில் பயங்கரம்....! நுங்கம்பாக்கம் சுவாதியை அடுத்து கே.கே நகரில் அஸ்வினி..! பட்டப்பகலில் கத்திகுத்து கொலை..!

இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான இடம் தமிழ்நாடு என்றும்  அதிலும் குறிப்பாக சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான இடம் என  சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு கூட தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், சென்னை கேகே நகரில் இயங்கி வரும் மீனாக்ஷி கல்லூரியில் bcom  முதலாம் ஆண்டு படித்து வருகிறார் அஷ்வினி

இன்று மதியம் அஷ்வினி கல்லூரி முடிந்து,வெளியில் வரும் போது அழகேசன் என்ற நபர் கத்தியால் குத்தி உள்ளார்.ரத்த வெள்ளத்தில் மிதந்த  அஷ்வினி சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.தொடர்ந்து மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்து வந்ததாக முதற்கட்ட  விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அஸ்வினி அழகேசனின் காதலை ஏற்க மறுத்ததால் கொலைசெய்ததாக தெரிகிறது.

மேலும்,மதுரவாயலில் தங்கி இருந்த அஸ்வினிக்குதொடர் காதல் தொல்லை கொடுத்து வந்ததாகவும்,அந்த நபரின் டார்ச்சர் தாங்காமல்,  கேகே நகரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் அஸ்வினி தங்கி படித்து வந்துள்ளதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், தினமும் ஒரு தலை காதலால் டார்ச்சர் செய்து வந்த  அழகேசன் இன்று அந்த மாணவியை கொலை செய்துள்ளார்.

 நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி

இதே போன்று, நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் ஐ.டி பொறியாளர் சுவாதி பொதுமக்கள் முன்னிலையில் 2016 ஆம் ஆண்டு ஜுன் 24 ஆம் தேதியன்று ரயிலுக்காக காத்திருந்த  போது வெட்டிகொலை செய்யப்பட்டார்.

ஒரு தலை காதலால்,சுவாதியை பட்டப்பகலில் கொலை செய்த சம்பவத்தை போன்றே, இன்று அஸ்வினியும் கொலை செய்யப்பட்டு உள்ளார்.