கிருஷ்ணகிரி
 
படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஆஷிபாவுக்கு உரிய நீதி வழங்க வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில், "காஷ்மீரில் சிறுமி ஆஷிபா படுகொலைக்கு உரிய நீதி வழங்க வேண்டும்" என்று ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சுல்தான் தலைமை வகித்தார். நகரத் தலைவர் பைரோஸ், நகர துணைச் செயலாளர் அம்ஜத், முன்னாள் நகரத் தலைவர் அம்ஜத், முன்னாள் நகரச் செயலாளர் தாஜீத்தீன், முன்னாள் நகரப் பொருளாளர் ஜியா, முன்னாள் தொழிலாளர் அணி நிர்வாகி கலந்தர், நகர மருத்துவரணி செயலாளர் சைப்கான், மனித நேய மக்கள் கட்சி நகரப் பொருளாளர் அப்சல்கான், நகர துணைச் செயலாளர் அம்ஜத், நகரச் செயலாளர் ஆரிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், மாநில துணை செயலாளர் திருப்பத்தூர் சனாவுல்லா கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில், "சிறுமி ஆஷிபா படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தும், கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு உரிய நீதி வழங்கிட வேண்டும்" என்று வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

இதில் கட்சியின் மாநில ஊடகப்பிரிவு பொருளாளர் அல்தாப்அகமத், முன்னாள் மாவட்டத்  தலைவர் நூர்முகமத், மாவட்டச் செயலாளர் வாஹித்பாஷா, மாவட்ட துணைச் செயலாளர் ரிஸ்வான், மாவட்ட பொருளாளர் ஜாவீத், மாவட்ட துணைச் செயலாளர் மக்பூல்அகமத், மாவட்ட துணைச் செயலாளர் யாசின், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ரியாஸ்அகமத் உள்பட பலர் பங்கேற்றனர்.