தமிழகத்தையே அதிரவைத்த சுவாதி கொலை...

கடந்த 2016 ஆண்டு கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி, அதிகாலை 6.40 மணிக்கு, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில்,  சுவாதி வெட்டிச் சிதைக்கப்பட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த சுவாதியின் சடலம், தமிழகத்தை அதிரவைத்தது. அந்தக் காட்சிகள் எழுப்பிய ஓலக்குரல் தமிழகம் முழுவதும் ஒலித்தது. அன்று தொடங்கி, அடுத்துவந்த 4 நாட்களுக்கு, தமிழகத்தின் மில்லியன் டாலர் கேள்விகளாக இருந்தவை, கொலையாளி யார்... கொலையாளி எங்கே... எதற்காக இந்தப் படுகொலை என்பவைதான். ஒவ்வொரு நாளும் கேள்விகளின் அழுத்தம் ஒட்டுமொத்த தமிழகத்தையே இறுக்கிக் கொண்டிருந்தபோது.

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர், ராம்குமார்.  மென்பொருள் பொறியாளரான சுவாதியை, பட்டப்பகலில் பலரது முன்னிலையில் கொடூரமாக கொன்றார்  என பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், குற்றவாளி என்று முடிவுசெய்யப்பட்ட ராம்குமாரை ஜூலை 1 ஆம் தேதி போலீஸார் கைது செய்தனர். இந்தக் கைது சம்பவத்தின்போதே ராம்குமார் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட ராம்குமாரை விசாரித்ததில், சுவாதியை அவர் ஒருதலையாக காதலித்துள்ளார். அவரது காதலை ஏற்காத சுவாதி, ராம்குமாரை இழிவாக திட்டியதாகவும்”. “தேவாங்கு போல இருக்கிறாய். என அவமானப்படுத்தி பேசியுள்ளார். அதனால்தான் சுவாதியை கொன்றேன் என்று இப்போதைய வாக்குமூலத்திலும் ராம்குமார் சொன்னதாக தகவல் வெளியானது. 

பின்னர் சுவாதி கொலை வழக்கு தொடர்பாக ராம்குமார் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், 2016 செப்டம்பர் 18 ஆம் தேதி சிறைச்சாலைக்குள் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பியைக் கடித்து ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இச்சம்பவத்தில் மர்மம் இருப்பதாக ராம்குமாரின் பெற்றோரும் வழக்கறிஞரும் குற்றம் சாட்டினர்.  ராம்குமார் தற்கொலையுடன் சுவாதி கொலை வழக்கின் மர்ம முடிச்சு அவிழ்க்கப்படாமலே முடிவுக்கு வந்தது.

"கல்லூரி வகுப்பறையில் கொல்லப்பட்ட சோனாலி"

இதனையடுத்து, மதுரை, மானகிரி பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகள் சோனாலி, கரூரில் ஒரு கல்லூரியில் பொறியியல் மூன்றாமாண்டு படித்து வந்தார். அதே கல்லூரி மாணவன் உதயகுமார், தன் காதலை சோனாலி ஏற்காததாலும், தன்னுடன் போனில் பேசாமல் இருந்ததாலும்  சோனாலியை வகுப்பறையிலேயே கட்டையால் அடிக்க, தலையில் பலமாக அடிபட்டு உயிரிழந்தார்.

கொடுராமாக வெட்டிக் கொள்ளப்பட்ட அஸ்வினி...

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கொடூரமாக கொல்லப்பட்டது தமிழகத்தையே அதிரவைத்தது. இதனையடுத்து, தற்போது இதே தலைநகர் சென்னை கே.கே.நகரில் மீனாட்சி கல்லூரியில் அஸ்வினி என்ற மாணவி பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.  இன்று வழக்கம்போல் அஸ்வினி கல்லூரிக்கு சென்றார். கல்லூரி முடித்துவிட்டு சில மணி நேரத்திற்கு முன்பு கல்லூரி வாயிலின் வெளியே நின்று கொண்டிருந்தார்.  அப்போது திடீரென அஸ்வினியை ஒரு நபர் கத்தியால் சராமாரிகாக குத்தப்பட்டதில் ரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்த மாணவி அஷ்வினி பரிதாபமாக உயிரிழந்தார். 

மேலும் மாணவியை கத்தியால் குத்திய நபரை அங்கிருந்தவர்கள் சுற்றி வளைத்து பிடித்து அடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இதனையடுத்து மாணவியை கொடூரமாக கொன்ற அவனது பெயர் அழகேசன் என தெரியவந்துள்ளது. 

அதாவது அஸ்வினி மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் எனவும் கொலையாளி பெயர் அழகேசணும்  மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் அழகேசன் தொந்தரவால் அஸ்வினி ஜாபர்கான்பேட்டையில் உறவினர்கள் வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்ததாக தெரிகிறது. ஏற்கனவே காதல் தொல்லை கொடுத்துவந்த அழகேசன் மீது  அஸ்வினி போலீசில் புகார் அளித்ததன் பேரில் அழகேசன் கைது செய்யப்பட்டு சில நாட்களுக்கு முன்பு வெளியில் வந்து தன்னை காதலிக்காத கோபத்தில் வெட்டி சாய்த்துள்ளது அம்பலமாகியுள்ளது.