லதா ரஜினிகாந்தின் ஆஸ்ரமம் பள்ளி விவகாரம் தொடர்பாக, பள்ளியை ஆய்வு செய்ய வழக்கடிறஞர் ஒருவரை நியமித்து அறிக்கை அளித்திட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலையில், லதா ரஜினிகாந்தின் பள்ளி இயங்கி வந்தது. இந்த பள்ளியில் குழந்தைகள் முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவ, மாணவிகளும் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், பள்ளி கட்டடத்துக்கு வாடகை பாக்கி தரவில்லை என்று கூடி, அதன் உரிமையாளர் வெங்டேஷ்வரலு, பூட்டு போட்டுள்ளார். 

இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்தில், இது தொடர்பாக ஐஸ்வர்யா தனுஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

பள்ளி கட்டடத்துக்கு பூட்டு போட்டதன் காரணமாக பள்ளியின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக கூறி, ஐஸ்வர்யா தனுஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தருந்தார். அதில், கட்டட உரிமையாளர்களிடம் இருந்து இழப்பீட்டுத் தொகையாக ரூ.5 கோடி கேட்டும் மனு அளித்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆஷ்ரம் பள்ளியை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஒருவரை நியமித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆய்வறிக்கை இன்று தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை இன்று பிற்பகல் உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.