பள்ளிகள் நாளை திறக்கப்படவுள்ள நிலையில், வெளியூர் சென்றிருந்தவர்கள் ஊர் திரும்பும் வகையில் 1450 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துதறை நடவடிக்கை எடுத்துள்ளது.
நாளை பள்ளிகள் திறப்பு
கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் கடந்த ஆண்டு முழுமையாக செயல்படவில்லை இதன் காரணமாக ஒரு மாதம் தாமதமாக பள்ளிகளில் தேர்வுகள் நடைபெற்றது. பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையானது கடந்த மாதம் 13 ம் தேதியிலிருந்து விடப்பட்டது. இதனை அடுத்து சுமார் 30 நாட்களுக்குப் பிறகு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்கள் சீரமைக்கப்பட்டும், கழிவறைகள் பழுது பார்க்கப்படும் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தயார் நிலையில் உள்ளது. முதல் கட்டமாக 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு புதிய கல்வியாண்டு வகுப்புகள், நாளை தொடங்க உள்ளது. இதைத் தொடர்ந்து வருகிற 20-ந்தேதி பிளஸ்-2 வகுப்புகளும் 27-ந்தேதி பிளஸ்-1 வகுப்புகளும் தொடங்குகின்றன.

1450 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
நாளை பள்ளிகள் தொடங்க உள்ள நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல் ஒரு வாரத்திற்கு மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை பள்ளிகள் தொடங்கியதும் மாணவர்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்படும் பள்ளி கல்வி துறை கூறியுள்ளது. காலை எப்போது பள்ளிகளை தொடங்கலாம்? மாலை எப்போது பள்ளிகளை முடிக்கலாம்? என்பது தொடர்பாக அந்தந்த பள்ளிகளே முடிவெடுக்கலாம் என்று கூறப்பட்டு உள்ளது. ஆனாலும் காலை 9.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை பள்ளிக்கூடங்களை நடத்த மாதிரி நேரத்தை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதனிடையே சுமார் ஒரு மாத கால விடுமுறை காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு குழந்தைகளோடு சென்று உள்ளனர். இதனையடுத்து நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் ஒரே நேரத்தில் வெளியூரில் இருந்து குழந்தைகளுடன் சொந்் ஊருக்கு சென்ற பெற்றோர்கள் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அவர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் தமிழக போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் பேருந்துகளை தவிர்த்து கூடுதலாக 1450 பேருந்துகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு இயக்க போக்குவரத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதையும் படியுங்கள்
