மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, நிர்மலா சீத்தாராமன் அஞ்சலி செலுத்தினர்.

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, சென்னையில் நடைபெற உள்ள கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக இன்று தமிழகம் வருகை தந்தார். அவருடன் நிர்மலா சீத்தாராமன் வந்திருந்தார்.

சென்னை, மெரினா கடற்கரைக்கு சென்ற மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி மற்றும் நிர்மலா சீத்தாராமனை, தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் வரவேற்றார்.

பின்னர், ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்ற மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி, ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் வந்த நிர்மலா சீத்தாராமன், ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமாரும், ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.