Arrested by a burglar who was stealthily arrested in the thiefs law ...

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் தொடர்ந்து திருட்டுத்தனமாக சாராய விற்பனை செய்துவந்த இளைஞர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், அடுத்த பழைய மல்லவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் காசி மகன் ராமராஜன் (29). இவர், தொடர்ந்து திருட்டுத்தனமாக சாராயம் விற்று வந்ததால் பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இருந்தும் இவர் சாராய விற்பனையை நிறுத்தாமல் மீண்டும் மீண்டும் சாராய விற்பனையை செய்துவந்துள்ளார்.

எனவே, இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமிக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி பரிந்துரைத்தார்.

அந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட ஆட்சியர், ராமராஜனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க அதிரடியாக உத்தரவிட்டார்.

இதனையடுத்து, வேலூர் மத்திய சிறையில் உள்ள ராமராஜனிடம் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை காவலாளர்கள் கொடுத்தனர்.