Around the country the review of the feasibility of the fever will take place

காய்ச்சலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் நிலவேம்பு கசாயம் வழங்க பரிசீலனை நடைபெறும் எனவும் நிலவேம்பு கசாயத்தை ஆய்வுக்கு உட்படுத்தி நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் வழங்குவோம் எனவும் இந்திய மருத்துவ குழு தெரிவித்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

டெங்குவுக்கு தனிவார்டு அமைக்கப்பட்டுள்ளது வரவேற்கதக்கது எனவும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் முறைகேடு நடந்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதி வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், டெங்குவின் தாக்கம் அதிகரித்தே வருகிறது. 

தமிழகம் முழுவதும் டெங்கு பாதிப்பு அதிகளவில் இருந்து வந்தாலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் டெங்குவைக் கட்டுப்படுத்தக்கோரி திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அரசை தொடரந்து வலியுறுத்தி வருகிறது. 

டெங்குவால் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் ஐந்து மருத்துவர்கள் கொண்ட மத்திய வல்லுநர் குழு இன்று டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த சென்னை வந்தனர். 

பின்னர், காய்ச்சலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் நிலவேம்பு கசாயம் வழங்க பரிசீலனை நடைபெறும் எனவும் நிலவேம்பு கசாயத்தை ஆய்வுக்கு உட்படுத்தி நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் வழங்குவோம் எனவும் இந்திய மருத்துவ குழு தெரிவித்துள்ளது. 

டெங்குவுக்கு தனிவார்டு அமைக்கப்பட்டுள்ளது வரவேற்கதக்கது எனவும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் முறைகேடு நடந்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.