ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்குப் பழி? சபதம் எடுத்த கேங்! உளவுத்துறை வார்னிங்! உச்சக்கட்ட பதற்றத்தில் தலைநகர்!
தலைநகர் சென்னையில் கடந்த 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்குப் பழியாக கொலை செய்த தரப்பில் இருந்து நெருங்கிய உறவினர்கள் யாராவது கொலை செய்யப்படலாம் என உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் சென்னையில் கடந்த 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் என்பவர் மட்டும் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல்! யார் கூப்பிட்டாலும் போக கூடாது! திருமாவளவன் நிர்வாகிகளுக்கு கண்டிஷன்..!
இந்த கொலை சம்பவம் தொடர்பாக அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல் வெளியான வண்ணம் உள்ளது. மறுபுறம் கைது நடவடிக்கையும் நீண்டு கொண்டே போகிறது. இதுவரை திமுக நிர்வாகியின் மகன் சதீஷ், அதிமுக நிர்வாகியாக இருந்த மலர்க்கொடி, தமாகாவை சேர்ந்த ஹரிஹரன், பாஜகவை சேர்ந்த அஞ்சலை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! என் புருஷனை என்கவுண்டர் பண்ணிடுவாங்கனு பயமா இருக்கு! வழக்கறிஞர் அருள் மனைவி கதறல்!
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு இன்றுடன் 16வது நாளாகும். 16வது நாளான காரியத்திற்குள் கொலையில் சம்பந்தப்பட்டவர்களை பழிக்கு பழி வாங்க கொலை செய்வோம் என ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் உறுதிமொழி எடுத்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆகையால் இன்று 16 -வது நாள் காரியம் நடைபெறுகிறது. எனவே இன்று ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் கொலை நடக்க வாய்ப்ப்புள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகையால் போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.