Arampiccittankaiya ... arampiccitanka .... - Kudankulam porattamam again !!!
கூடங்குளத்தில் 3 வது 4 வது அலகில் அணு உலைகள் அமைக்கும் பணியை எதிர்த்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என அணுசக்திக்கு எதிரான போராட்ட ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருநெல்வேலியில் உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
தாமிரபரணி ஆற்று நீர் குடிப்பதற்கும் விவசாயத்திற்கும் தான் பயன்படுத்த வேண்டும்.
வேறு யாருக்கும் குறிப்பாக பன்னாட்டு நிறுவங்களுக்கு தாரைவார்க்க கூடாது.
தங்கச்சிமடத்தில் பிரிட்ஜோவின் கொலைக்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெற்று கொண்டு இருக்கிறது.இதற்கு இதுவரை பிரதமர் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.
கூடங்குளத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள அணு உலைகள் ஒன்று மற்றும் இரண்டு அலகுகள் மூடப்பட்டுள்ளது.
அதுவே பயனளிக்காத நிலையில், தற்போது புதிதாக தொடங்கவுள்ள அணு உலைகளுக்கு எதிராக குரல் கொடுத்து விரைவில் போராட்டம் நடத்துவோம்.
இந்த கூடங்குளத்திலே மீண்டும் மிகபெரிய அணு உலைகள் அமைப்பதை கேள்விக்கு உள்ளாக்குவோம், தடுப்போம்.
இவ்வாறு பேசினார்.
