Appreciation Ceremony for rajiv murdere murugan

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான முருகனுக்கு பாராட்டு மரியாதை செய்ய ஆவணம் கோரி தலைமை செயலாரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ராஜீவ்காந்தி கடந்த 1991–ம் ஆண்டு மே 21–ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடந்த பொதுக்கூட்டத்தின் போது, விடுதலைப்புலிகளின் மனித வெடி குண்டுப்பெண் தாணுவால் படுகொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கில், முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே சிறையில் உள்ள முருகனை பார்க்க அவரது தாய், சோமனி வேலூர் வந்தபோது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து சிறையில் உள்ள முருகன், தனது தாய் சோமனியை சந்திக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். ஆனால், அவரது மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், முருகன் இருந்த சிறை அறையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் முருகன் இருந்த சிறை அறையின் கழிப்பறையில் 2 செல்போன், 2 சிம்கார்டு, சார்ஜர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

தற்போது கொலையாளி முருகன் காவி உடை அணிந்து நீளமான தாடி வைத்து ஒரு சாமியார் போன்று காட்சி அளிக்கிறார்.

இந்நிலையில், ஆயுள் தண்டனை கைதியான முருகனுக்கு பாராட்டு மரியாதை செய்ய ஆவணம் கோரி தலைமை செயலாரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை ராஜ கோபால் குருஜி என்பவர் அளித்துள்ளார்.