உள்ளாட்சி பிரதிநிதி பதவி காலம் முடிந்தது.! இனி இவர்கள் தான் பொறுப்பு- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கு சிறப்பு அலுவலர்களை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

Appointment of Special Officers after completion of term of office of Local Government Representatives KAK

நகராட்சி,ஊராட்சி தேர்தல்

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நகராட்சி, ஊராட்சி ஆகியவற்றிற்கான தேர்தல் நடைபெற்றது. 2019ஆம் ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகளுக்கான பதவிக்காலம்  ஐனவரி 5ம் தேதியுடன் நிறை பெற்றது.இந்நிலையில், பதவிக் காலம் முடியவுள்ள 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகள், வார்டுகள் மறுவரையறை செய்யப்பட உள்ளன குறிப்பாக, சில ஊராட்சி பகுதிகளை, பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளில் இணைப்பதற்கான பணிகள் நடக்க வேண்டியுள்ளன. இதனால், பதவிக் காலம் முடிவடைய உள்ள ஊரக உள்ளாட்சிகளில், சிறப்பு அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

 இது தொடர்பாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 

Appointment of Special Officers after completion of term of office of Local Government Representatives KAK

பதவி காலம் முடிவடைந்தது

மாவட்டங்களில் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சிகள் ஆகியவற்றிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் 05.01.2025 உடன் முடிவடைந்துள்ளது. இந்த மூன்றடுக்கு ஊராட்சிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்கும் வரை, மூன்றடுக்கு ஊராட்சிகளின் நிர்வாகம் செம்மையாக நடைபெறுவதை உறுதிசெய்திட 06.01.2025 முதல் 05.07.2025 வரை தனி அலுவலர்களை நியமனம் செய்து அரசாணையில் உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறப்பு அலுவலர்கள் நியமனம்

ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் முறையான நிர்வாகத்தினை தொடர்ந்து செயல்படுத்திடும் வகையில் அலுவலர்கள் நிர்வாக நடைமுறையினை கண்காணித்திட அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி), ஒவ்வொரு ஊராட்சியிலுள்ள தீர்மானப்புத்தகம், பிற பதிவேடுகள், ரொக்கப்புத்தகங்கள் பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படாத காசோலை புத்தகங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் (Bank Pass Book) ஆகியற்றை பொறுப்பில் எடுத்துக்கொள்ள வேண்டும். பொறுப்பில் எடுத்துக்கொண்டதற்கான அறிக்கையினை 08.01.2025 காலை 10.00 மணிக்குள் ஊராட்சிகளின் இணைக்கப்பட்டுள்ளது). ஆய்வாளருக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Appointment of Special Officers after completion of term of office of Local Government Representatives KAK

காசோலைகள்- உத்தரவிட்ட அரசு

05.01.2025- தேதியில் காசாக்கப்படாமல் நிலுவைய 26 காசோலைகளைக் (Uncashed Cheques) கணக்கிட்டு அக்காசோலைகளை வங்கியில் அனுமதிக்கும்போது வட்டார வளர்ச்சி அலுவலரின் அனுமதி பெற்ற பின்னரே அனுமதிக்க வேண்டும் என்ற விவரத்தினை வங்கி மேலாளர்களுக்கு முன்னோடி வங்கி மேலாளர் (LDM) மூலம் உடனடியாக சுற்றறிக்கை அனுப்பிட வேண்டும். சம்மந்தப்பட்ட அலுவலர்கள் 06.01.2025 அன்று முற்பகல் நிர்வாக நடைமுறைப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதற்கான விவரத்தினை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஊராட்சிகளின் ஆய்வாளர் என்ற முறையில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஊராட்சி நிர்வாகத்தைத் திறம்பட செயல்படுத்திட உரிய அறிவுரைகள் வழங்கும்படி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios