செட்டிநாடு ஆத்தங்குடியில் தயாரிக்கப்படும் வண்ணமிகு டைல்ஸ் கற்களுக்கு புவிசார் குறியீடு கேட்டு செட்டிநாடு ஆத்தங்குடி பாரம்பரிய டைல்ஸ் கற்கள் தயாரிப்பு கூட்டமைப்பு சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. 

செட்டிநாடு ஆத்தங்குடியில் தயாரிக்கப்படும் வண்ணமிகு டைல்ஸ் கற்களுக்கு புவிசார் குறியீடு கேட்டு செட்டிநாடு ஆத்தங்குடி பாரம்பரிய டைல்ஸ் கற்கள் தயாரிப்பு கூட்டமைப்பு சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. 

சிவகங்கை மாவட்டத்தில் புறநகரில் இருப்பது ஆத்தங்குடி கிராமம், செட்டிநாடு என்று அழைக்கப்படுகிறது. இங்கு கடந்த 500 ஆண்டுகளாக பாரம்பரிய முறையில், பல வண்ணங்களையும், வடிவங்களையும் கொண்ட டைல்ஸ் கற்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.இந்த கற்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கடும் கிராக்கி இருக்கிறது. வெளிநாடுகளுக்கு இந்த டைல்ஸ் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. 

இயற்கை முறையில், செயற்கை வண்ணங்கள் சேர்க்காமல் தயாரிக்கப்படும் இந்த டைல்ஸ்சுற்றசு்சூழலுக்கு ஏற்றது. வீடுகளில் சுவர்களிலும், தரைகளிலும் ஒட்டுக்கூடிய டைல்ஸ்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்நிலையில் ஆத்தங்குடியில் மட்டுமே தயாரி்க்கப்படும் இந்த வகை டைல்ஸ் கற்களுக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தை வழக்கறிஞர் பி சஞ்சய் காந்தி தாக்கல் செய்துள்ளார். 

அவர் கூறுகையில்“ செட்டிநாடு நகரத்தார்தான் இந்த மண்டலத்துக்கே இந்தவகை டைல்ஸ் கற்களை அறிமுகம் செய்தனர். தெற்காசிய நாடுகளுக்கும், மேற்கத்திய நாடுகளுக்ுகம் நகரத்தார் வணிகத்துக்காச் செல்லும்போது, கண்ட காட்சிகள், கிடைத்த பொருட்கள், ஆகியவற்றை சொந்த ஊருக்கு கொண்டு வந்து இந்த வகை கற்களை உருவாக்கினார்கள். 

பாரம்பரிய முறையில் கட்டப்படும் வீடுகளுக்கு இந்த டைல்ஸ் கற்களுக்கு கடும் கிராக்கி இருக்கிறது. இந்த வகை கற்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்தால், இந்த டைல்ஸ் தயாரிப்பில் இருக்கும் ஏராளமான கலைஞர்கள் பயன்பெறுவார்கள்” எனத் தெரிவித்தார்