Annual Exam Schedule 2025 Released : 1 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுக்கான அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
Annual Exam Schedule 2025 Released : தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதி முடிகிறது. இதையடுத்து 1 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டுக்கான தேர்வுகள் குறித்து அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தான் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
மழையின் ஆட்டம் இன்னும் முடியல! எந்தெந்த மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகுது தெரியுமா?
அதன்படி, 1 ஆம் வகுப்பு 5 ஆம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 9ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையில் நடத்தப்படும். இதே போன்று தான் 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 8ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையில் இறுதி தேர்வு நடத்தப்படும். இதையடுத்து ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், எப்போது பள்ளி திறக்கப்படும், எத்தனை நாட்கள் கோடை விடுமுறை என்பது குறித்த விவரங்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிடவில்லை.
வனத்துறை பிடித்த சிறுத்தை... சிறிது நேரத்தில் இறந்த பரிதாபம்! என்ன நேர்ந்தது?
