'கேரளாவின் குப்பைக் கிடங்காகும் தமிழ்நாடு; ஸ்டாலின் என்ன செய்கிறார்?' அண்ணாமலை கேள்வி!

கேரளாவின் குப்பைக் கிடங்காக தமிழ்நாடு மாறி வருவதை தடுக்க ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

Annamalai has said Stalin did not condemn Kerala for dumping garbage in Tamilnadu ray

தமிழ்நாட்டின் அண்டை மாநிலமாக அதிக எல்லைகளை பகிர்ந்து கொண்டுள்ளது கேரளா. தமிழ்நாடு கேரளாவை இணைக்கும் பிரதான எல்லைகளாக கோவை‍ பாலக்காடு சாலை, நாகர்கோவில் களியாக்காவிளை ‍திருவனந்தபுரம் சாலை, தேனி குமுளி சாலை, தென்காசி கொல்லம் சாலைகள் உள்ளன.  இதற்கிடையே கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள், மீன் கழிவுகளை தமிழ்நாட்டில் கொட்டி வருவதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் கழிவுகளை கொட்டும் கேரள அரசின் செயலை முதல்வர் ஸ்டாலின் நிறுத்தவில்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''காவிரி நீர் உள்ளிட்ட தமிழகத்தின் உரிமைகளை தனது கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், கேரள மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களை, கேரள கம்யூனிஸ்ட் அரசின் குப்பைக் கிடங்காக மாற்றவும் அனுமதித்திருக்கிறார். 

கேரள கம்யூனிஸ்ட் அரசுடன் திமுக அரசு உறவாடிக் கொண்டிருக்கும் அதே வேளையில், கேரள மாநிலத்தின் பயோமெடிக்கல், பிளாஸ்டிக் மற்றும் இறைச்சிக் கழிவுகளின் குப்பைக் கிடங்காக நமது தென்மாவட்டங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. தினம் தினம் லாரிகளில் கொண்டு வந்து கொட்டப்படும் இந்தக் கழிவுகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய சோதனைச் சாவடிகள், வெறும் வசூல் மையங்களாக மட்டுமே மாறிவிட்டன.

Annamalai has said Stalin did not condemn Kerala for dumping garbage in Tamilnadu ray

ஒருபுறம் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கேரள மாநிலத்துக்குச் சட்டவிரோதமாக கனிமங்கள் கடத்தப்படுவதைக் கண்டும் காணாததுபோல் இருக்கும் திமுக அரசு, மறுபுறம் தமிழகத்தை குப்பை கொட்டும் இடமாகப் பயன்படுத்திக்கொள்ள சுதந்திரமான அனுமதி அளித்துள்ளது. அதிகாரிகளிடமும், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் பலமுறை புகார் அளித்தும், இதனைத் தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. முழுக்க முழுக்க திமுக அரசுக்குத் தெரிந்தே இவை நடைபெறுகின்றன. 

உடனடியாக, கேரள மாநிலத்தின் குப்பைக் கிடங்காக தமிழக எல்லையோர மாவட்டங்கள் மாற்றப்படுவதைத் திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இனியும் இதே போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால், வரும் 2025 ஜனவரி முதல் வாரத்தில், பொதுமக்களைத் திரட்டி, இந்த உயிரியல் மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகளை லாரிகளில் ஏற்றிச் சென்று, கேரளாவில் கொண்டு கொட்டுவோம். முதல் லாரியில் நானும் செல்வேன் என்பதைத் திமுக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios