கோவைக்கு மட்டும் தனி கவனம்! தேர்தல் பிரச்சாரத்துக்கு பக்காவாக ரெடியான அண்ணாமலை!

கோவை தொகுதியில் அண்ணாமலையே வேட்பாளராகப் போட்டியிடுவதால் ஏப்ரல் 1, 2, 3 ஆகிய மூன்று நாள்கள் கோவையில் மட்டும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். பின்னர் மீண்டும் ஏப்ரல் 6, 7, 8 ஆகிய தேதிகளிலும் கோவையில் அண்ணாமலை வாக்கு சேகரிக்க இருக்கிறார்.

Annamalai election campaign: Tamil Nadu BJP announces lok sabha election campaign dates of Annamalai sgb

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக  தலைவர் அண்ணாமலையின் தொகுதிகள் வாரியான பிரச்சாரச் சுற்றுப்பயணம் குறித்த விவரத்தை பாஜக வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் தேர்தல் பிரச்சாரப் பொறுப்பாளர் அமர் பிரசாத் ரெட்டி இந்தப் பிரச்சார அட்டவணையை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு பாஜக அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், தமிழ்நாடு முழுவதும் அண்ணாமலை மேற்கொள்ள இருக்கும் தேர்தல் பிரச்சாரச் சுற்றுப்பயண அட்டவணையில் தேதி வாரியாக அவர் வாக்கு சேகரிக்க இருக்கும் தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பாஜக தரப்பில் பிரதமர் மோடி தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தமிழ்நாடுக்குப் பலமுறை வந்து பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்துவிட்டுப் போய்விட்டார். அதைத் தொடர்ந்து அண்ணாமலை வரும் வெள்ளிக்கிழமை முதல் தனது பிரப்புரையை ஆரம்பிக்க இருக்கிறார். மார்ச் 29 முதல் ஏப்ரல் 12 வரை தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கவுள்ளார்.

சில்லறை கட்சி... அண்ணாமலை பற்றி கேள்வி கேட்டதால் கடுப்பான அமைச்சர் டிஆர்பி ராஜா!

கோவை தொகுதியில் அண்ணாமலையே வேட்பாளராகப் போட்டியிடுவதால் ஏப்ரல் 1, 2, 3 ஆகிய மூன்று நாள்கள் கோவையில் மட்டும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். பின்னர் மீண்டும் ஏப்ரல் 6, 7, 8 ஆகிய தேதிகளிலும் கோவையில் அண்ணாமலை வாக்கு சேகரிக்க இருக்கிறார்.

வரும் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான மார்ச் 20ஆம் தேதி தொடங்கி மார்ச் 27ஆம் தேதியுடன் முடிகிறது. இதனால், பாஜக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

நாளுக்கு நாள் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் தங்கள் பிரச்சாரப் பயணத்தை ஏற்கெனவே தொடங்கியுள்ளனர்.

2025 முதல் வாழ்நாள் ஊதியத் திட்டம்! குறைந்தபட்ச ஊதிய முறைக்கு குட்பை சொல்லும் மத்திய அரசு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios